நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் இன்று (ஜனவரி 19) தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர். பாலு தலைமையில் மொத்தம் 6 பேர் அடங்கிய நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழுவை பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன் விவரம்,
தலைவர் :
டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்)
உறுப்பினர்கள் :
கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்)
இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)
க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)
ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்)
இந்த குழுவில் அமைச்சர்கள் 4 பேரும், எம்.பி.க்கள் 2 பேரும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி.யும், உறுப்பினர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி.,எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மற்றும் மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கனிமொழி தலைமையில் மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!
மக்களவை தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் உதயநிதி ஸ்டாலின்
நான் நேரில் பார்த்த “ஜாவா சுந்தரேசன்” மீனாட்சி சவுத்ரி: கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி
ஊழியர்களை பணிநீக்கம் செய்யும்… உலகின் முன்னணி நிறுவனங்கள்… காரணம் என்ன?
