ஸ்ரீராம் சர்மா
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது கொளத்தூர் தொகுதியிலோர் சாதனை விளக்கக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு அமைந்தது.
அடடா, செயலூக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் போலொரு வீரிய கட்சியை காண்பதரிது எனும் கூற்றை அது மீண்டும் நிரூபித்தது.
அது, மயன் எழுப்பியதா அல்லது மாவட்டச் செயலாளர் எழுப்பியதா எனும்படி மனம் மயக்கியபடி நின்றிருந்தது. DMK Achievement Presentation Exhibition
நுழைவு வாசலே ஏதோ ஒரு தியேட்டருக்குள் நுழைவது போல – மாண்புமிகு முதலமைச்சரின் நான்காண்டு சாதனை போல – வெகு மிடுக்காக விரவி அமைந்திருந்தது.
காரணம், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களது செயலாற்றல் எனில் அது மிகையாகாது..
*******K Achievement Presentation Exhibition

உள்ளரங்கத்தின் தலைவாசலில் 12,909 திருக்கோயில்களில் ஒருகால பூஜைத் திட்டம் உண்டாக்கியதை ஆவணப்படுத்தி இருந்தார்கள். DMK Achievement Presentation Exhibition
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும் தி.மு.க.வின் இளைஞர் அணிச் செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த, முதல்வரின் அந்த சாதனை விளக்கக் கண்காட்சியை தனது நீண்ட அனுபவத்தின் வழியே பார்த்துப் பார்த்து பிரம்மாண்டமாக இழைத்து இழைத்துச் செதுக்கியிருந்தார் அறநிலையத்துறை அமைச்சர்!
இன்னுயிர் காப்போம், பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், அரசாங்கம் ஏற்ற கல்விச் செலவு, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தாய் சேய் நலப் பரிசுப் பெட்டகத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், மகப்பேறு நிதியுதவி, திருநங்கை ஓய்வூதியத் திட்டம் என எண்ணற்ற திட்டக் காட்சிகளை உள்ளடக்கியபடி இறுமாந்து இருந்தது அந்த அரங்கம்!
*******

“நாடு போற்றும் நான்காண்டு; தொடரட்டும் பல்லாண்டு” எனும் தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கண்காட்சி அரங்கமானது, முதலமைச்சரது கொளத்தூர் தொகுதியின் 64 ஆவது வட்டத்தில் அமைந்திருந்தது.
மொத்தம் 14 வார்டுகளைக் கொண்ட முதல்வரது அந்தத் தொகுதியில் 64 ஆம் வார்டை மட்டும் ஏன் அமைச்சர் தேர்ந்தெடுத்தார் ஏன சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் சொன்னார்கள் ; அரங்கம் அமைக்கப்பட்டிருந்த அந்த மைதானத்துக்குப் பெயர் “அரிச்சந்திரா மைதானமாம் !” DMK Achievement Presentation Exhibition
” எந்தத் தருணத்திலும் உண்மையை மட்டுமே பேசுவேன். சத்தியத்தின் வழி மட்டுமே நிற்பேன்’ எனச் சூளுரைத்தபடி சரித்திரத்தில் நிலைத்து நின்றவரல்லவா அரிச்சந்திரர்.
அவரது பெயர் கொண்ட மைதானத்தில் தமிழகத்துக்கு முதல்வர் ஆற்றிய பணிகளைக் காட்சிப்டுத்துவதே சாலத் தகும் என சொல்லாமல் சொல்லி விட்டார் போல அமைச்சர்.
*******
மக்கள் சாரை சாரையாக வந்தவண்ணம் இருந்தார்கள்.
அரங்கத்தில் நிசப்தம் நிலவியது. அமைதியாக ஒவ்வொரு சாதனை விளக்க புகைப்படங்களையும் உள்வாங்கி ஏற்றுக் கொண்டபடியே நிறைவோடு மக்கள் நகர்ந்ததைக் கண்ணுற முடிந்தது. DMK Achievement Presentation Exhibition
வெயிலுக்கு இதமாக ஏ.ஸி செய்யப்பட்டிருந்த அந்த அரங்கம், முதல்வரின் குளிர்ந்த மனதோடு போட்டி போட்டபடி அனைவரையும் வரவேற்றபடி இருந்தது.
வாசலில், 64 ஆவது வட்ட கழகச் செயலாளர் மட்டுமல்ல அருகாமை வட்டங்களின் மொத்த தி.மு.க. முன்னணியினரும் ஒன்றுகூடி இருந்தார்கள். அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அமைச்சர் அடிக்கொரு முறை அழைத்து முடுக்கிக் கொண்டே இருக்க பம்பரமாகச் சுழன்றார்கள். chievement Presentation Exhibition
இன்முகத்தோடு, வந்த மக்கள் அனைவரையும் வரவேற்று நலம்பாடியபடி இருந்தார்கள்.
தி.மு.க. என்பது கட்சி மட்டுல்ல. அது ஒரு குடும்பம் எனும் சொலவடை ஒன்றுண்டு. அந்தக் காட்சியைத்தான் அங்கே காண முடிந்தது. DMK Achievement Presentation Exhibition

குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது.
வயது முதிர்ந்த ஏழைத்தாய் ஒருவரை அணுகிக் கேட்டேன்.
கண்ணீர் மல்கியபடி சொன்னார், “சார், எங்க குடும்பத்தில் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் எங்கள் முதலமைச்சரின் ஆட்சியில் பலன் அடைந்துள்ளோம். அந்த நன்றிக் கடனை என்றும் மறக்கமாட்டோம்.”
மக்கள் நலனை முன் வைத்துச் செயல்படும் ஆட்சியை வீழ்த்த எவரால்தான் இயலும் இங்கே!?

அந்த அரங்கத்தில் 3 D அரங்கம் ஒன்றை அழகுற அமைத்திருந்தார்கள். அதில் 3 D கண்ணாடியோடு 7 நிமிடங்களுக்கு தரமானதொரு காட்சியைக் காணச் செய்தார்கள்.
போலவே, முதல்வரும், துணை முதல்வரும் தோன்றிப் பேசும் Hologram Video க்களையும் தனித்தனி அரங்கமாக அமைத்திருந்தார்கள்.
காட்சி முடிந்ததும் மக்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆனந்தித்தார்கள்.
ஆனால், தொழில் நுட்பம் அறிந்தவன் என்னும் முறையில் அதில் ஈடுபட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் எனக்குப் பரிச்சயமானவர்கள், திறமைசாலிகள், அருமைத் தம்பிகள் என்பதால், “உங்களால் இதை இன்னமும் கூட சிறப்பாகச் செய்திருக்க முடியுமே ! ஏன் விட்டுக் கொடுத்தீர்கள்?” என உரிமையோடு கேட்டேன்.
அப்போதுதான் சொன்னார்கள், “அமைச்சர் திடுமென ஆணையிட்டு விட்டார். செய்து முடித்தாக வேண்டிய கட்டாயம் எங்களுக்கு. இயன்றவரை செய்து விட்டோம் சார்” என்றார்கள்.
அவர்களிடம், “அவர் அப்படித்தான். ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதுவும் முதல்வருக்காகச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அசுர குணத்தோடு இறங்கிவிடுவார். அடுத்த கணமே அதன் ரிசல்ட்டை பார்க்கத் துடிப்பார். அடுத்த வாய்ப்பு கட்டாயம் உங்களுக்கு அமையும். அப்போது உங்கள் டீம் ஸ்ட்ரென்த்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டு மேலதிக அருமையோடு செய்து விடுங்கள். வாழ்த்துக்கள்!” என்றபடி நகர்ந்தேன்.
ஆம், 5000 சதுர அடி கொண்ட அந்த அரிச்சந்திர கிரவுண்டில் வெறும் 52 மணி நேரத்தில் அப்படி ஒரு அரங்கத்தை கட்டி எழுப்பி நிற்க வைத்தது சாதனையாகும். அதனை சாத்தியமாக்கும் வல்லமை தி.மு.க. எனும் செயலூக்கம் கொண்ட கட்சிக்கே உண்டான தனிக்குணமாகும்.

சுருங்கச் சொன்னால், நோக்கம் – வடிவாக்கம் – செயல்திறன் – வெற்றி என அனைத்திலும் முதலமைச்சரின் தனிக் குணத்தைக் கொண்டதாகவே அமைந்திருந்தது அந்தக் கண்காட்சி.
இது ஒரு துவக்கம்தான். நாடு நகரமெங்கும் இந்தக் கண்காட்சி தொடரும் என்றார்கள்.
தொடரட்டும்.
தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாது மக்கள் நலனை மட்டுமே முன் வைத்து ஓயாது உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சருக்கு அது அருமருந்தாக அமையட்டும்.
பேரறிஞர் அண்ணா சொன்னது போல “தீ பரவட்டும் !”
கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
