திமுக கூட்டணியில் முதல் முறையாக இணைந்த தேமுதிக.. 2006 முதல் 2024 வரை என்ன நடந்தது?

Published On:

| By Mathi

DMK DMDK Alliance

2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது. 2005-ம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக திமுக கூட்டணியில் தற்போது தேமுதிக இடம் பெற்றுள்ளது.

2005-ம் ஆண்டு தேமுதிக கட்சியை நடிகர் விஜயகாந்த் தொடங்கினார்.

ADVERTISEMENT

2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அத்தேர்தலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் தேமுதிக தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது.

ADVERTISEMENT

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. அத்தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்ற தேமுதிக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தகுதியையும் பெற்றது.

இதன் பின்னர் அதிமுகவுடனான கூட்டணி முறிந்த நிலையில் தேமுதிகவில் பெரும் பிளவும் ஏற்பட்டது.

ADVERTISEMENT

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. ஆனால் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம் பெற்று 104 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த தேர்தலிலும் தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்த தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்று 60 தொகுதிகளில் போட்டியிட்ட து. அத்தேர்தலிலும் ஒரு இடத்திலும் தேமுதிக வெற்றி பெறவில்லை.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது தேமுதிக.

தற்போது 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் முதல் முறையாக தேமுதிக தற்போது இடம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share