2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிப்ரவரி 19-ந் தேதி சந்தித்தார்.
வீடியோ:
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக- பாஜக கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் உரிய நேரத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்தார்.இந்நிலையில் திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் இன்று வருகை தந்தனர். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். இதனையடுத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தேமுதிக இடம் பெற்றுள்ளது.




