வீல்சேரில் அமர்ந்தபடி இன்று(டிசம்பர் 14) நடைபெற்ற தேமுதிக கட்சி பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் நேரில் பங்கேற்றார். மேலும் அவர் வகித்து வந்த கட்சி பொதுச்செயலாளர் பதவிக்கு பிரேமலதா தேர்வாகியுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18ஆம் சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என கடந்த 11ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 3 நாட்களுக்குள் சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்று வரும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் நேரில் பங்கேற்க அழைத்து வரப்பட்டார் விஜயகாந்த்.
வீல் சேரில் அமர்ந்தபடி மேடைக்கு அழைத்துவரப்பட்ட விஜயகாந்தை கண்ட அக்கட்சி தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர்.
பின்னர் விஜயகாந்தின் சட்டை பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட துண்டுச்சீட்டை எடுத்து வாசித்து பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நிறைவேறிய தீர்மானங்கள்!
1.நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய விஜயகாந்துக்கே முழு அதிகாரம்
2.தேமுதிகவின் புதிய பொதுசெயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
3. தேமுதிக தொண்டர்கள் ஒற்றுமையுடனும், முழு வேகத்துடனும் கட்சி மற்றும் தேர்தல் பணியாற்றிட வேண்டும்
இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தனது கணவரும், கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காலில் விழுந்து பிரேமலதா ஆசி வாங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கேரளாவில் திடீரென அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு!
இரண்டாவது ஆபரேஷன்… துரை தயாநிதி கோமாவில் இருக்கிறாரா? – மெடிக்கல் ரிப்போர்ட்!
வண்ண புகைகுண்டு வீச்சு: அமித்ஷாவிற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி!
