தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி மற்றும் கோவை போத்தனூருக்கு முன்பதிவு இல்லா 2 சிறப்பு மின்சார ரயில்களும், ஒரு விரைவு ரயிலும் இன்று(அக்டோபர் 30) இரவு இயக்கப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் வேலை செய்யும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதன் காரணமாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மற்றும் கோவை மாவட்டம் போத்தனூருக்கு இன்று இரவு முன்பதிவில்லாத இரண்டு சிறப்பு மின்சார ரயில்கள் மற்றும் ஒரு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளதாகத் தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
தாம்பரம் – திருச்சி
அதன்படி, இன்று நள்ளிரவு 12.35 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து கிளம்பும் 8 பெட்டிகள் கொண்ட ரயில் (ரயில் எண் 06157) செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் வழியாக நாளை(அக்டோபர் 31) காலை 6.30 மணிக்குத் திருச்சி சென்றடையும்.
இதே ரயில்(ரயில் எண் 06158) நாளை(அக்டோபர் 31) காலை 9.30 மணிக்குத் திருச்சியிலிருந்து கிளம்பி, அதே வழியில் நாளை இரவு 8.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
எழும்பூர் – திருச்சி
அதே போன்று எழும்பூரிலிருந்து இன்று(அக்டோபர் 30) இரவு 9.10 மணிக்குக் கிளம்பும் 8 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் (ரயில் எண் 06155), தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல் மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருபாதிரிபுலியூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபனாசம், தஞ்சாவூர் வழியாக நாளை (அக்டோபர் 31) காலை 5.45 மணிக்குத் திருச்சி சென்றடையும்.
இதே ரயில்(ரயில் எண் 06156), திருச்சியிலிருந்து நாளை(அக்டோபர் 31) மதியம் 12 மணிக்கு கிளம்பி, இதே வழியில் பயணித்து, நாளை இரவு 8.45 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் – போத்தனூர்
சென்னை சென்ட்ரலிருந்து இன்று(அக்டோபர் 30) இரவு 10.10 மணிக்கு கிளம்பும் ரயில் (ரயில் எண் 06159) பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், ஷோலிங்கூர், வாலாஜா ரோட், காட்பாடி, சமல்பட்டி, மொரப்பூர், பொம்மிடி, சேலம், திருப்பூர் வழியாகக் கோவை மாவட்டம் போத்தனூருக்கு சென்றடையும்.
இதே ரயில்(ரயில் எண் 06160) நவம்பர் 3ஆம் தேதி காலை 7.45 மணிக்கு போத்தனூரிலிருந்து கிளம்பி அன்று மாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இவ்வாறு தென்னக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“சு.வெங்கடேசனையே கொடுக்க சொல்லுங்க” : அமைச்சர் மூர்த்தியின் பேச்சால் முற்றும் மோதல்!
மகாராஷ்டிரா தேர்தல்: நாமினேஷன் தேதி முடிந்த பின்பும் நீடிக்கும் குழப்பம்!