தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மற்றும் மதுரையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளிப் பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 3 நாட்கள் உள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகின்றனர்.
நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போன்று மதுரை மற்றும் கோவையில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) மூலம் மதுரையில் இருந்து 1,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் 565 சிறப்புப் பேருந்துகளும் தீபாவளி முடிந்து நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் 485 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோவையில் இருந்து நாளை முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை மதுரை, தேனி, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு 290 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா