ADVERTISEMENT

கம்ருதீனுக்கு செக்… பிக்பாஸில் வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கும் ‘சின்னத்திரை’ பிரபலம்!

Published On:

| By christopher

DivyaGanesh entry BiggBossTamil9 as wildcard

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரபல நடிகை திவ்யா கணேஷ் நுழைய உள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நாள்தோறும் கூச்சல் குழப்பம் என 25வது நாளை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

இதில் கனித்திரு, சபரி, திவாகர், விஜே பாரு என 20 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், கடந்த வாரம் வரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை உள்ளிட்ட நான்கு பேர் வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் நுழைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நடிகை திவ்யா கணேஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘அன்னம்’ சீரியலில் இருந்து சமீபத்தில் திடீரென விலகினார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே இந்த முடிவை எடுத்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

திவ்யா கணேஷ் ஏற்கனவே ‘மகாநதி’ சீரியலில் நடித்த சக போட்டியாளரான கம்ருதீன் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இவர்களுக்கிடையே ஏற்கெனவே மோதல்கள் இருக்கும் நிலையில், திவ்யா கணேஷின் வருகை நிகழ்ச்சியில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

திவ்யா கணேஷைத் தவிர, நடிகர் பிரஜின் மற்றும் நடிகர் சிபு சூர்யன் ஆகியோரும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக நுழையக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share