மீண்டும் பரவி வரும் திருமண வதந்திக்கு நடிகை திவ்யா காட்டமாக பதில் கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. நடிகை, தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டவர். திவ்யாவுக்கு 40 வயதை கடந்துவிட்டாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கன்னட சினிமாவில் கோல்டன் கேர்ள் என்றும் இவரை அழைப்பார்கள்.
தமிழில் சிம்பு நடித்த ‘குத்து’ படத்தில் நாயகியாக நடித்தவர் தான் திவ்யா . இவருக்கு ரம்யா என்ற பெயரும் உள்ளது. திருமண வயதை கடந்து விட்டதால், அடிக்கடி இவருக்கு திருமணமாகப் போகிறது என்று அவ்வப்போது வதந்திகள் பரவுவது வழக்கம்.
அதேபோல் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தொழிலதிபர் ஒருவருடன் திவ்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்றும் நவம்பர் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற போவதாகவும் வதந்தி கிளம்பியது. மணமகன் இவர்தான் என்று ஒருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.
இந்த தகவல் பலராலும் பரவப்பட்டது. இந்த திருமண வதந்தி தொடர்பாக திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “ஊடகங்களால் எனக்கு பலமுறை திருமணம் நடந்துள்ளது. அந்த எண்ணிக்கையை தவறவிட்டுவிட்டேன். நான் திருமணம் செய்து கொண்டால், உங்களிடம் தெரிவிக்கிறேன். முதலில் வதந்தியை நிறுத்துங்கள் என்று கொந்தளிப்பாக கூறியுள்ளார்.
திவ்யா ஸ்பந்தனா 2012 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அதே ஆண்டில் மாண்ட்யா மக்களவை தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனால், 2014 ஆம் ஆண்டு பொது தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் சோசியல் மீடியா பிரிவு தலைவராக திவ்யா இருந்தார். 2019 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகு, அந்த பதவியில் இருந்து திவ்யா விலகிக் கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”எங்களுக்கே பாதுகாப்பு இல்லை”: காவல்துறைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
ஃபோர்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!