4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Published On:

| By Kavi

Rain

புயல் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ளது. இதற்கு டிட்வா என்று பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம்–புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா கூறுகையில், 28ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை  ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக  கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது.

ADVERTISEMENT

ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இந்த சூழலில், தூத்துக்குடி, நாகை, காரைக்கால், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும்,  சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி,  புதுச்சேரி உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share