Ditwah Cyclone Updates: வரலாற்றில் முதல் முறை.. டிட்வா புயலின் நகரும் பாதை- பெரும் துயரில் ஈழத் தமிழர்கள்!

By Mathi

|

Published on 28 Nov 2025, 8:13 AM

Ditwah Cyclone Update

இலங்கையில் ஈழத் தமிழரின் தாயகப் பகுதியான வட மாகாணத்துக்குள் நுழைந்து வட தமிழ்நாடு நோக்கி டிட்வா புயல் நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிலப் பகுதிக்குள் நுழைந்து தமிழ்நாட்டு கடலோரத்தை நோக்கி புயல் நகருவது என்பது இதுவே வரலாற்றில் முதல் முறை என கூறப்படுகிறது.

வங்க கடலில் உருவான டிட்வா புயல் இன்று அதிகாலை 4.30 மணி நிலவரப்படி

ADVERTISEMENT
  • இலங்கை திருகோணமலைக்கு தெற்கே 50 கி.மீ தொலைவில்
  • இலங்கை மட்டக்களப்புக்கு வடமேற்கில் 70 கிலோ மீட்டர் தொலைவில்
  • இலங்கை அம்பந்தோட்டா துறைமுகத்தின் வடக்கில் 220 கி.மீ தொலைவில்
  • இந்தியாவின் புதுச்சேரியின் தெற்கு- தென்மேற்கில் 460 கி.மீ தொலைவில்
  • தமிழ்நாட்டின் சென்னையின் தெற்கு- தென்மேற்கில் 560 கி.மீ. தொலைவில்

மையம் கொண்டுள்ளது; இது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

டிட்வா புயலால் இலங்கையில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது.

ADVERTISEMENT

டிட்வா புயலானது வட தமிழகத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இலங்கையில் ஈழத் தமிழரின் தாயக நிலப் பகுதியான வட மாகாணத்துக்குள் நுழைந்து- அதாவது முழுமையாக நிலப் பகுதியை கடந்துதான் தமிழ்நாட்டை நோக்கி டிட்வா புயல் நகரக் கூடிய நிலையில் இருக்கிறது என்கின்றன இலங்கை தமிழர் ஊடகங்கள்.

வங்க கடலின் புயல் இலங்கையின் வடக்கு நிலப்பகுதிக்குள் முழுமையாக நுழைந்து இந்தியாவை நோக்கி நகரக் கூடும் என்பதுதான் டிட்வா புயலின் நகரும் பாதையாக இருக்கக் கூடும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். இப்படியான, நிலப்பகுதிக்குள் நுழைந்து இந்தியாவை நோக்கி புயல் நகரக் கூடிய நிகழ்வு என்பது வரலாற்றில் முதல் முறை எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

டிட்வா புயலினால் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் பெருமழை கொட்டி வருகிறது. மலை மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது தமிழ்நாட்டை ஒட்டிய இலங்கை வடக்கு மாகாணத்தையும் டிட்வா புயல் மிக மோசமாக; பேரழிவுடன் தாக்கக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel