பாராசிட்டமால் உள்ளிட்ட 50 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு! : சிடிஎஸ்சிஓ அறிவிப்பு!

Published On:

| By indhu

Discovery of 50 substandard drugs! - CDSCO notification

பாராசிட்டமால் உள்ளிட்ட 50 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு என்பது இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்பாகும்.

ADVERTISEMENT

இந்த அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், காய்ச்சல் மற்றும் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் 50 மருந்துகள் உபயோகப்படுத்துவதற்கு தகுதியானவை அல்ல என கண்டறிந்துள்ளது.

அதாவது, இந்த 50 மருந்துகளை நோயாளிகள் எடுத்துக்கொள்வதால் சம்மந்தப்பட்ட நோய் சரியாகாமல் இருக்கலாம் அல்லது நோயாளிகளுக்கு இதனால் பக்கவிளைவு போன்றவை ஏற்படலாம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில், பாராசிட்டமால் 500 மி.கி., உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்து, டெல்மிசார்டன், குஃப்டின் இருமல் சிரப், குளோனோசெபம் மாத்திரைகள், டிக்லோஃபெனாக், மல்டி வைட்டமின்கள் மற்றும் கால்சியம் டேப்கள் ஆகிய மருந்துகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டாளர்கள் ஜெனரல் ராஜீவ் ரகுவன்ஷி வெளியிட்ட பட்டியலில் மேலும் சில மருந்துகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

அதில், மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் லாக்டுலோஸ், Telmisartan மற்றும் Amlodipine IP மாத்திரைகள், Dexamethasone Sodium Phosphate Injection I.P மற்றும் Clonazepam நரம்பியல் சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட மாத்திரைகள் தரம் குறைந்தவையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த முழுவிவரங்கள் cdsco.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விளக்கமளித்துள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”திட்டமிட்டு கலவரத்தை உருவாக்க அதிமுகவினர் முயற்சி” : ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Share market: அதிக லாபம் கொடுக்கும் பங்குகள் என்னென்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share