திமுக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மதுரை உத்தங்குடியில் இன்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் 3,400 பேர் உள்ளிட்ட 6,000 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர். disabled welfare educational wing created in dmk
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேமுதிக தலைவர் விஜயகாந்த், என்.சங்கரையா உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது
இந்த பொதுக்குழுவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே உள்ள அணிகளுடன் புதிதாக மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர்கள் அணி உருவாக்க இருப்பதாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நேற்று (மே 31) செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில், புதிதாக மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர்கள் அணி என இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. disabled welfare educational wing created in dmk