விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.சென்டரில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
இந்ந நிகழ்வில் 234 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட நடிகர் விஜய் ஆர்,கே,சென்டருக்கு ரசிகர்களுடன் வந்தார். அப்போது மண்டபத்தில் காத்திருந்த ரசிகர்கள் விஜயை வரவேற்றனர்.
ரசிகர்கள் புடைசூழ மண்டபத்திற்குள் நுழைந்த விஜய் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் வந்து அமர்ந்தார். அப்போது மாற்றுத்திறனாளி மாணவர் நடிகர் விஜய்யிடம் பரிசு ஒன்றை வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சி: மதிய சாப்பாடு என்ன தெரியுமா?
