டாம்க்ரூஸ் Lucky Bhaskar 2
மலையாளத் திரையுலகம் தாண்டி இந்தி, தமிழ், தெலுங்கு என்று இதர மொழிப் படங்களிலும் நடித்து, தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் துல்கர் சல்மான். ஒவ்வொரு மொழியிலும் அவருக்கென்று தீவிர ரசிகர்கள் உருவாகும் அளவுக்குக் கவனமாகத் தனது படங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். தமிழில் அவர் நடிப்பில் ‘காந்தா’ விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. Lucky Bhaskar 2
ஒரு ‘பான் இந்தியா’ நாயகனாக இருந்துவரும் துல்கர், அந்த அந்தஸ்தைத் தக்கவைக்கும் விதமாக அமைந்திருந்தது ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம். தெலுங்கில் தயாரான இப்படம் தமிழ், இந்தியிலும் பெரிய கவனிப்பைப் பெற்றது. Lucky Bhaskar 2

இதன் இயக்குனரான வெங்கி அட்லூரி, தனுஷை வைத்து ‘வாத்தி’ படம் தந்திருந்தார். தற்போது சூர்யாவை நாயகனாகக் கொண்டு தமிழ், தெலுங்கில் ஒரு படம் இயக்கி வருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில், ‘வாத்தி’ படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு ‘நோ’ என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்திருக்கிறார்.
அதேநேரத்தில், ‘லக்கி பாஸ்கர் 2 உண்டா’ என்ற கேள்விக்கு ‘யெஸ்’ என்றிருக்கிறார். அதனை உருவாக்குவது தொடர்பாக எண்ணம் இருப்பதாகவும், அதற்கான பணிகள் மெதுவாக நடந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் வெங்கி அட்லூரி.
இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவோ, படத்திற்கான பணிகள் நடைபெறவோ இன்னும் சில மாதங்கள், ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும், ‘கேஜிஎஃப்’ பாணியில் இப்படமும் ஒரு ‘பிரான்சைஸ்’ ஆக உருவெடுக்கும் என்பதே திரையுலகைச் சேர்ந்தவர்களின் கருத்து.
அதற்குத் தீனி போடுகிற வகையில் ‘லக்கி பாஸ்கர் 2’ அமைந்தால் சரி என்பதுதான் ரசிகர்களின் எண்ணம்.
