6 ஆண்டுகள் போராட்டம்: ஜெயம் ரவி பட இயக்குனருக்கு கிடைத்த புது வாய்ப்பு!

Published On:

| By Selvam

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் “அடங்க மறு”.  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் கார்த்திக் தங்கவேலுக்கு கிடைத்ததாகவும் ஆனால் ஏதோ சில காரணத்தினால் அந்த படத்தின் பணிகள் முதற்கட்டத்திலேயே கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திக் தங்கவேல் ஓர் புதிய படத்தை இயக்க போகிறாராம். இந்த படத்தில் ஜெயம் ரவி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

அடங்க மறு படத்தை போலவே இந்த புதிய படமும் ஆக்சன் திரில்லர் படமாக உருவாக உள்ளதாம். இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான முதல் கட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன், மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2, மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் JR 33 என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு தான் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

கூடிய விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சேதமடைந்த ஐபோன்: பணத்தை திருப்பி செலுத்த நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share