பக்‌ஷிராஜனின் வெட்டிங்-டே கொண்டாட்டம்!

Published On:

| By Balaji

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் வித்தியாசமான முறையில் அவரது மனைவிக்குத் திருமணநாள் வாழ்த்து கூறியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது. 2.0 என்று பெயரிடப்பட்ட அந்தப்படத்தில் ரஜினிகாந்த கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ‘பக்‌ஷிராஜன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப்படத்தில் அவரது மிரட்டலான தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில் தனது திருமண நாளைக் கொண்டாடும் அவர் பக்‌ஷிராஜன் உடையில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி அக்‌ஷய்குமார் நடிகையும் தயாரிப்பாளருமான ட்விங்கில் கன்னாவைத் திருமணம் செய்தார். இன்று (ஜனவரி17) அவர்கள் தங்களது 19-ஆவது திருமண நாளைக்கொண்டாடுகின்றனர்.

இந்தநிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அக்‌ஷய் குமார் பகிர்ந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share