’ஃபயர்’ படம்…. ரச்சிதாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா? இயக்குனர் விளக்கம்!

Published On:

| By Selvam

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தது. அதே போன்று தன்னை பிரபலபடுத்திக் கொள்ளும் வகையில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தொலைக்காட்சி, பிக்பாஸ், கிளாமர் புகைப்படம் காரணமாக சமூக வலைதளத்தில் இவரை பின்தொடர்பவர்கள் அதிகரித்தனர்.

இந்தநிலையில், ரச்சிதா நடித்துள்ள படம் பற்றி அவர் வெளியிட்டுள்ள கமெண்ட் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.  பாலாஜி முருகதாஸ், ரச்சிதா ஆகியோர் நடித்துள்ள ஃபயர் என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஆபாச காட்சிகள் நிறைந்த இந்த படத்தை விழிப்புணர்வு படமாக பார்க்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ஜே.சதீஷ் குமார் கூறியிருந்தார்.

ஃபயர்  படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பளமே தரவில்லை என்று பாலாஜி முருகதாஸ் பதிவிட, ரச்சிதாவும் அதை ஆமோதித்து பதிவிட்டிருந்தார். ரச்சிதா தனது பதிவில் ஃபயர் படத்தை ‘ஷிட்’ என்று கூறியதோடு தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள தயாரிப்பாளர், ‘நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நடித்துள்ளீர்கள். இலவசமாக நடிக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள், ஒப்பந்தம் அனைத்தும் என்னிடம்உள்ளது. ஃபயர் படத்தில் நீங்களும் நடித்துள்ளீர்கள். இப்போது அதே படத்தை ஷிட் என்று விமர்சனம் செய்கிறீர்கள். அந்த ஷிட்டில் தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக தயாரிப்பாளரும், இயக்குநருமான சதீஷ் குமாரிடம் பேசிய போது, “சினிமா என்பது ஒரு தொழில் அதில் எல்லா வகையான படங்களும் தயாரிக்கப்படும்.

அப்படிப்பட்ட படத்தில் நடித்து விட்டு அப்படத்தை கொச்சைபடுத்த கூடாது. ஃபயர் படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பளமே தரவில்லை என கூறும் நடிகர் பாலாஜி முருகதாஸ் ஒரு நாள் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்தது இல்லை. இருந்த போதும் பேசிய அடிப்படையில் அவருக்கான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது” என கூறினார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெள்ளப்பெருக்கு… குற்றாலத்தில் குளிக்க தடை!

பியூட்டி டிப்ஸ்:  ‘ஆலியா கட் குர்தா’ ஆடை அணிய ஆசையா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share