பட்டத்து அரசனாக அதர்வா

Published On:

| By Kavi

இயக்குனர் சற்குணம் – நடிகர் அதர்வா நடிக்கும் படத்திற்கு ‛பட்டத்து அரசன்’ என பெயரிட்டு முதல் பார்வையை நேற்று வெளியிட்டுள்ளனர்.

‛‛களவாணி, வாகை சூடவா, களவாணி 2, சண்டிவீரன்” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சற்குணம். நடிகர் அதர்வாவை வைத்து ஏற்கனவே சண்டிவீரன் படத்தை இயக்கினார்.

ADVERTISEMENT

அதையடுத்து மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கி வந்தார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசை ஜிப்ரான்.

பெயர் வைக்காமலேயே இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இந்த படத்திற்கு ‛பட்டத்து அரசன்’ என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம்.குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தப் ‘பட்டத்து அரசன்’ திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

அனைத்து வயதினருக்கும் பிடித்த வகையில் குடும்பத்துடன் பார்க்கும் படமாக பட்டத்து அரசன் இருக்கும் என்கிறார் இயக்குநர் சற்குணம்.

இராமானுஜம்

நீரவ் மோடியை நாடு கடத்த உத்தரவு!

சென்னையில் கனமழை: வீட்டிற்குள் முடங்கும் பொதுமக்கள்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share