இரண்டு ஆண்டுகளாக உயிரோடு பார்க்க முயற்சி செய்தும்… இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!

Published On:

| By Manjula

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”என் இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும் போதே பார்த்து ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என, கடந்த 2 ஆண்டுகளாக ஆசைப்பட்டேன்.

ADVERTISEMENT

அதற்காக முயற்சியும் செய்தேன் முடியவில்லை. ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது இந்த நிலையிலேயே உயிரற்ற அவரின் உடலை பார்க்கக்கூடாது என்று கடவுள் நினைத்தாரோ இல்லையோ தெரியவில்லை.

ADVERTISEMENT

இந்த நாளிலே நான் துபாயில் இருக்கிறேன். திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் ஒரு சகாப்தம் இன்று முடிந்திருக்கிறது. அதற்காக கண்ணீர் சிந்துவதை விட எனக்கு வேறு ஒன்றும் வழி தெரியவில்லை.

அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன், ” என உருக்கத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

ADVERTISEMENT

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் 19 படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி…- விஜயகாந்த் நினைவில் திருச்சி சிவா

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்… கண்ணீரில் மூழ்கிய பிரபலங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share