மறைந்த நடிகர் விஜயகாந்தை வில்லன் கதாபாத்திரமாக சித்தரித்து சில கதைகளை எழுதியுள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவரது படங்கள் வெளியாகும் போது சமூக தளத்திலும் அரசியல் தளத்திலும் விவாதத்தை ஏற்படுத்தும்.
இந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தநிலையில், சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கியது.
இதில் தங்கலான் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்பட விழாவில் பா.ரஞ்சித் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,
“நான் முதலில் ஒரு அனிமேட்டராக வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஏனென்றால் மாதம் 20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

பள்ளியில் படிக்கும்போதே கதைகள் எழுத தொடங்கி விட்டேன். ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, நாடகத்தில் நடித்தேன். ஆனால், எனக்கு சரியாக டயலாக் பேச வரவில்லை. அதனால், கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு பழங்குடி ஆடை அணிந்து டான்ஸ் ஆடினேன்.
என் டான்ஸை பார்த்த ஆடியன்ஸ் ஒன்ஸ்மோர் கேட்டனர். நான் முதல் முதலாக காதல் வயப்பட்டபோது, கவிதைகள் எழுத தொடங்கினேன். எனக்கு விஜயகாந்த் ரொம்ப பிடிக்கும். அவரை வில்லனாக சித்தரித்து சில கதைகளைக் கூட எழுதியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுகவின் பொருளாளர் ஆகிறார் விஜயபாஸ்கர்
அதிமுக பொதுக்குழு கூட்டம்… நல்ல நேரத்திற்காக காத்திருந்த எடப்பாடி