இயக்குநர் ராமின் அடுத்த படம்: தலைப்பு என்ன?

Published On:

| By Monisha

இயக்குநர் ராம் இயக்கிவரும் அடுத்த படத்தின் தலைப்பை, படக்குழு இன்று (அக்டோபர் 8) அறிவித்துள்ளது.

தமிழில் வித்தியாசமான கதைக் களம் கொண்ட படங்களை ரசிகர்களுக்கு கொடுப்பவர் இயக்குநர் ராம். இவர் தமிழில் இதுவரை ’கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’, ’தரமணி’, ’பேரன்பு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

’தரமணி’, ’தங்க மீன்கள்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் மாறுபட்ட திரைக்களத்தில் தயாரான ’பேரன்பு’ படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். இந்த படத்திற்கு மலையாள ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்தனர். தவிர, இவருடைய படங்கள் பெரும்பான்மையான விருதுகளையும் அள்ளிவருகிறது.

இந்த நிலையில் அவர், தன்னுடைய 7ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.

மேலும் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை விஹவுஸ் புரோடக்‌ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இப்படத்திற்குக் கூடுதல் சிறப்பை சேர்க்கும் விதமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பணியாற்றுபவர்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது வரை படத்தின் தலைப்பு என்னவென்று படக்குழு அறிவிக்கவில்லை.

இந்நிலையில் படத்தின் தலைப்பு என்ன என்பதை அறிவிக்கப்போவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி. படத்தின் தலைப்பு வரும் 11 ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மோனிஷா

’விக்ரம்’ படத்தை வென்றதா பொன்னியின் செல்வன்? வியாபார ஒப்பீடு!

அமெரிக்காவில் இருந்து ட்விட்டர் ஸ்பேஸில் அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share