இயக்குநர் ராஜு முருகனின் அடுத்த பட ஹீரோ குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
பத்திரிகையாளர், எழுத்தாளராக பயணத்தை தொடங்கிய ராஜு முருகன் ‘குக்கூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ‘ஜப்பான்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கார்த்தியின் 25-வது படம் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அப்படம் போதிய வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் ராஜு முருகன் அடுத்ததாக இயக்கவிருக்கும் நடிகர் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில் ராஜு முருகன் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது எஸ்.ஜே.சூர்யா தானாம். இயக்குநராக தொடங்கி இன்று வில்லனாக கலக்கி வரும், எஸ்.ஜே.சூர்யாவை நடிப்பு அரக்கன் என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
அதற்கு ஏற்றவாறு சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களில் அவர் பட்டையை கிளப்பி இருந்தார்.
கதைத்தேர்வுகளில் மிகுந்த கவனம் காட்டும் எஸ்.ஜே.சூர்யா தற்போது ராஜு முருகனுடன் கூட்டணி அமைத்திருப்பதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகி விட்டது.
‘டாடா’ தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இதற்கான நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என் தகுதியைப் பற்றிப் பேச எடப்பாடிக்கு யோக்கியதை இல்லை: ஆ.ராசா காட்டம்!
“பாஜக ஏமாற்றிவிட்டது” – கவனிக்க வைக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி