அதிமுக-வில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்

Published On:

| By Balaji

முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுத்தவருமான காமராஜரின் பேத்தி உட்பட அவரது குடும்பத்தினர் இன்று திமுக-வில் இணைந்தனர்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு சில மாதங்கள் முன்புவரை ஆதரவு தெரிவித்து வந்த இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இன்று அதிமுக-வில் இணைந்துள்ளார். ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இவர், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இன்று காலை ஜெயலலிதாவைச் சந்தித்து, தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, அடிப்படை தொண்டராகவும் தன்னை அதிமுக-வில் இணைத்துக் கொண்டார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share