கடந்த மே 6 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், நாங்குநேரியை சேர்ந்த மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்றது தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சின்னத்துரையை சாதிய பிரச்சனை காரணமாக சக மாணவர்களே அரிவாளால் வெட்டினர். சின்னத்துரையை காப்பாற்ற வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட ஒரு கொடூர சம்பவத்திற்கு பிறகும் மனம் தளராமல், நன்றாக படித்து தற்போது பிளஸ் 2-வில் 469 மதிப்பெண்ணை பெற்று சாதனை படைத்திருக்கும் சின்னதுரையை தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
தொடர்ந்து அனைவரும் சின்னதுரைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், சின்னதுரையை நேரில் அழைத்து பாராட்டியது மட்டுமின்றி, சின்னதுரையின் கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் எனது “நீலம் பண்பாட்டு மையம்” செய்வதற்கு தயாராக இருக்கிறது என்று உறுதியளித்துள்ளார்.
மாணவர் சின்னதுரை இயக்குநர் பா. ரஞ்சித்தை சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பெர்ஃபியூம், டியோடரன்ட் இல்லாமல் வியர்வை வாடையை விரட்ட…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா?