பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம்!

Published On:

| By Kavi

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி இயக்குநர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டு இனி அந்தப் பணிக்கான பொறுப்புகளைப் பள்ளிக்கல்வி ஆணையரே கையாள்வார் என தமிழக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தது. நிர்வாக சீர்திருத்தம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதவி மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,

“தொடக்கக் கல்வி இயக்குநரான அறிவொளி பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் இயக்குநர்-I ராமேஸ்வர முருகன் ஆசிரியர் வாரிய செயலாளராகவும், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளர் கண்ணப்பன் தொடக்கக் கல்வி இயக்குநராகவும்,

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் பழனிசாமி பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் இயக்கக இயக்குநராகவும், பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் இயக்கக இயக்குநர் குப்புசாமி, தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

விபத்து பகுதிக்கு செல்லாதது ஏன்? உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி!

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்: வசூல் விவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share