’SK21’ ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டிய நெல்சன்: ரிலீஸ் தேதி இதுதானா?

Published On:

| By Monisha

ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிச்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து SK 21 படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்கிறார்.

இந்நிலையில் SK 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்த இயக்குனர் நெல்சன் திலீப் குமார் படக் குழுவினரை பாராட்டியுள்ளார்.

https://twitter.com/Nelsondilpkumar/status/1748936437871919134

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஆஹா,SK 21 ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்தேன். டீசர் முழுவதும் செமயாக இருந்தது. இந்த உணர்ச்சிகரமான பயணத்தில் நீங்கள் செய்திருப்பதை உலகம் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. ராஜ்குமார் பெரியசாமிக்கும், SK 21 படக்குழுவுக்கும் எனது பெரும் கைதட்டல்” என்று தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் SK 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் போஸ்டர் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ஜெயம் ரவியின் ஃபேண்டஸி படம்?

நாளை வழக்கம் போல் பரிசோதனைகள் நடத்தப்படும்: நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவமனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share