ADVERTISEMENT

மணிரத்னம் இயக்கத்தில் தெலுங்கு ‘ஹீரோ’, கன்னட ‘ஹீரோயின்’!

Published On:

| By uthay Padagalingam

Director Maniratnam Next Movie

திரைப்படங்களின் ‘அப்டேட்’ ஓராண்டின் எல்லா நாட்களிலும் வெளியாக வேண்டும் என்றே பெரும்பாலான பிரபலங்கள் நினைப்பார்கள். ‘அது வேண்டாமே’ என்கிற சிலர் கூடத் தவிர்க்க முடியாமல் தமது படங்கள் பற்றிய தகவல்களைப் பகிர வேண்டியிருக்கும். வேறு வழியில்லாமல் சில பேட்டிகள், விவாத நிகழ்ச்சிகள், விழாக்களில் பங்கேற்க வேண்டியிருக்கும். அதுவே வழக்கமாக நிகழ்வது. Director Maniratnam Next Movie

அதிலிருந்து விலகித் தான் விரும்புகிறபோது மட்டுமே செய்திகளை வாரியிறைக்கிற ஒரு திரை பிரபலம் இயக்குனர் மணிரத்னம். ஒரு திரைப்படம் வெளியாகிற தேதியை முடிவு செய்தபிறகே, அது பற்றிய தொடர் ‘அப்டேட்’களை தர அவரிடம் இருந்து ‘க்ரீன் சிக்னல்’ படக்குழுவுக்குக் கிடைக்கும். இதோ, இப்போது ‘தக் லைஃப்’ வெளியீட்டையொட்டித் தொடர்ந்து அப்படம் குறித்த ‘அப்டேட்’கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

ADVERTISEMENT

ட்ரெய்லர் வெளியீடு, வெவ்வேறு மொழிகளுக்கான புரோமோஷன் என்று படக்குழுவும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. நாடு முழுக்க இருக்கும் ‘இன்ப்ளூயன்சர்’களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோக்களை கொண்டு படத்தை இன்றைய ‘இணைய’ தலைமுறையிடம் கொண்டு சேர்க்கிற வேலைகளும் நடக்கத் தொடங்கிவிட்டன. இன்னும் சில வாரங்களுக்கு அந்த படம் தொடர்பான பேச்சுகள் பரபரப்பாக இருக்கும்.

கமல், மணிரத்னம், சிம்பு, த்ரிஷா உட்பட ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பற்றிய தங்களது பிரமிப்புகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அவற்றையெல்லாம் எதிர்கொள்கிற ரசிகர்களுக்குச் சில, பல கேள்விகள் எழும். அவற்றில் ஒன்று, ‘மணி ரத்னத்தின் அடுத்த படம் என்ன’ என்பது. Director Maniratnam Next Movie

ADVERTISEMENT

படம் மட்டுமல்லாமல், அந்த கேள்வியும் ‘பான் இந்தியா’வாக இருக்க வேண்டுமென்று மணி ரத்னம் முடிவு செய்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. வேறொன்றுமில்லை, அவர் இயக்குகிற அடுத்த படத்தில் நவீன் பொலிஷெட்டி மற்றும் ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, ஜதி ரத்னாலு, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி தெலுங்கு படங்கள் வழியே கவனம் ஈர்த்த நாயகன் தான் நவீன். இவர் அடுத்து நடுத்து வரும் ‘அனகனகா ஒக்க ராஜு’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

சப்த சாகரதாச்சே எல்லோ – சைடு ஏ மற்றும் சைடு பி என இரண்டு பாகங்களாக வெளியான ரக்‌ஷித் ஷெட்டியின் படம் மூலம் பிரபலமானவர் ருக்மணி. இது ‘ஏழு கடல் தாண்டி’ என்ற பெயரில் இங்கும் வெளியானது. தமிழில் இவர் நடிப்பில் ‘ஏஸ்’, ‘மதராஸி’ படங்கள் வரவிருக்கின்றன. அடுத்ததாக, ஜுனியர் என்.டி.ஆர் படத்தில் நடிக்கிறார்.

ஆக, இன்றைய தலைமுறையினரை வசீகரிக்கிற ஒரு தெலுங்கு ஹீரோவையும் கன்னட ஹீரோயினையும் ஒன்றிணைத்து ஒரு தமிழ், தெலுங்கு பைலிங்குவலை மணிரத்னம் தரப்போவதாகத் தகவல்கள் வருகின்றன. இவை வெறுமனே தகவல்கள்தான். மணி ரத்னம் தானாக முன்வந்து அறிவிக்காத வரை இவை தகவல்கள் மட்டுமே.

தனது ‘பெர்பார்மன்ஸை’ காட்டுகிற படங்களுக்காக ‘கெட்டப் சேஞ்ச்’ என்று மெனக்கெடுகிற கமல்ஹாசன், நடுநடுவே சில ‘காமெடி’ ஸ்கிரிப்ட்களை கையிலெடுப்பார். அது போல, மணி ரத்னத்திற்கு ஆசுவாசம் தருபவை ‘ரொமான்ஸ்’ ஸ்கிரிப்ட்கள். கீதாஞ்சலி, அலைபாயுதே, ஓகே கண்மணி, காற்று வெளியிடை வரிசையில் இன்னொரு ’ரொமான்ஸ்’ படமாக இது இருக்குமா..?! Director Maniratnam Next Movie

Director Maniratnam Next Movie

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share