திருமணத்துக்கு அழைக்காதது ஏன்?: ‘டான்’ டைரக்டர் பதில்!

Published On:

| By Kumaresan M

கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில்  வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘டான்’.

தற்போது வரைக்கும் இத்திரைப்படம்தான் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாகவும் இருக்கிறது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். இவர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் வர்ஷினி என்பவருக்கும் கடந்த 5 ஆம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைபெற்றது. அதற்கு, சில நாட்களுக்கு முன்பு சிபி சக்ரவர்த்தி சிவ கார்த்திகேயன் உட்பட தன்னுடைய நண்பர்கள் சிலருக்கு வைத்த பார்ட்டியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இவரின் திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பால சரவணன், இயக்குநர்கள் அட்லி, ரவிக்குமார், உட்படப் பலர் கலந்து கொண்டனர். ஆனால், இவர் தனது திருமணத்துக்கு பல நண்பர்களை அழைக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 14) சென்னையில் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, திருமணத்துக்கு பலரையும் அழைக்காதது குறித்து  விளக்கமளித்தார்.

“திருமணம் வெளியூரில் நடந்ததால், பலரையும் அழைக்க முடியவில்லை. அதனால்தான், இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறேன். தனது அடுத்த படத்துக்கும் செய்தியாளர்கள், ரசிகர்களின் ஆதரவு வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. தற்போது, மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து மற்றொரு படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

36 லட்சம் மக்களுக்கு 20 லட்சம் முத்ரா கணக்குகளா? – கோவையில் குழம்பிய நிர்மலா சீதாராமன்

புலியை கொன்று ரத்தத்தை உதட்டில் வைத்தார்- யுவராஜ் தந்தை யோக்ராஜ் புது கதை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share