சேரன் வீட்டில் விசேஷம்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

Published On:

| By Manjula

நடிகர் சேரனுக்கு பெரிதாக அறிமுகம் தேவை இல்லை. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட அவர் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற படைப்பாளிகளில் ஒருவர்.

1997 ஆம் ஆண்டு வெளியான ‘பாரதி கண்ணம்மா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து நான்கு தேசிய விருதுகளை அள்ளினார். மேலும் ஐந்து மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என இவருடைய வெற்றிப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். வெகுஜன மக்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் காட்டுவதில் சேரன் வல்லவர்.

சேரன், செல்வராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு தற்பொழுது கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் சுரேஷ் ஆதித்யா என்பவரை மணமுடித்துள்ளார்.

திருமண விழாவில் பாரதிராஜா, சீமான், சிம்புதேவன், பாண்டியராஜ், சமுத்திரகனி, கே.எஸ் ரவிக்குமார் போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது புதுமண தம்பதியருக்கு திரை உலகை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Fact Check: முஸ்லீம்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்கிறார்களா? மோடி சொல்வது உண்மையா?

CSK vs LSG: முத்துப்பாண்டிய அடிச்சுப்புட்டானய்யா… மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கிண்டல்!

‘காதலே காதலே’ மஞ்சுமேல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்த அபர்ணா தாஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share