தங்கலான் பார்த்துவிட்டு நள்ளிரவில் ரஞ்சித்துக்கு போன் செய்த சேரன்

Published On:

| By christopher

Cheran praised the Thangalaan Movie

ஆகஸ்ட் 15 ஆம்தேதி வெளியான திரைப்படம் தங்கலான், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தபடத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

படத்தை பார்த்த திரை கலைஞர்கள், இயக்குநர்கள் படம் பற்றிய தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தங்கலான் திரையரங்கில் வெளியாகி இரண்டு வாரம் முடிவடையும் சூழலில் இயக்குநரும், நடிகருமான சேரன் படத்தை பார்த்த பின் படம் பற்றிய விமர்சனத்தை தனது X தளம் மூலமாக வெளியிட்டுள்ளார்.

“நேற்றுதான் தங்கலான் பார்க்க நேர்ந்தது. பா.ரஞ்சித் மற்றும் விக்ரமின அசுர உழைப்பும் அளவிடமுடியா திரை ஆற்றலும் காண முடிந்தது.

ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். கதை சொன்ன விதமும் காட்சிப்படுத்திய விதமும் அசரவைத்தது.

முதல்பாதி முழுவதும் ஆங்கிலப்படமாகவே இருந்தது. மண்ணின் உரிமையை இவ்வளவு சிறப்பாக எந்த படமும் சொல்லவில்லை.

மொழியாடலில் இருந்த பழமை இன்னும் அழகு சேர்த்தது. விக்ரம் நம் தலைமுறை கொண்டாட வேண்டிய நபர்.

Cheran praised the Thangalaan Movie

அந்த கதாபாத்திரத்துக்காக அவர் அவரை அர்ப்பணித்திருந்த விதம், சொல்ல வார்த்தைகள் இல்லை. இணை என எவரைத்தேடினும் கிடைக்கவில்லை.

தம்பி ஜி.வி பிரகாஷ் பெருமைப்படத்தக்க இசையால் இரைச்சலின்றி காட்சிகளை வியக்கவைத்ததை ரசித்தேன்.

திரைப்படத்தில் குறைகள் இருப்பினும் ரஞ்சித்தின் அரசியல் நிலைப்பாட்டை மனதில் கொள்ளாமல் (எனக்கில்லை) படைப்பு பேசிய அரசியலை கொண்டாடியே ஆக வேண்டும். அதுவே நாம் இந்த சினிமாவில் இருப்பதை அர்த்தமாக்கும்.

இரவுக்காட்சி முடிந்து நேரம் 1 மணி ஆனாலும் என் தொலைபேசியில் ரஞ்சித்தின் எண்ணை அழுத்தினேன்.

ஒருவரின் உழைப்பை பாராட்ட நேரமும் காலமும் காரணங்களும் பார்த்தால் அது பொய் என்பதால், சேதுவின் போதும் இரவுக்காட்சி பார்த்து நானும் பாலாவும் விக்ரமும் அதிகாலை 4 மணிவரை பேசியது நினைவு வந்தது.

அரசியல் நிலைப்பாடு, கொள்கைகளை கடந்து சினிமாவை நேசிக்க அதை படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை உணர்ந்து கொண்டாட சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும். அது எவராயினும்.

ஏனெனில் படைப்பாளிகளின் நோக்கம் வென்று சமூகம் சமமாகும்போது நீயும் நானும் கைகோர்த்தே ஆகவேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : ஃபார்முலா 4 கார் ரேஸ் முதல் ’GOAT’ 4வது சிங்கிள் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : ராஜ்கிரா பர்ஃபி

திருச்சி என்ஐடி பாலியல் தொல்லை விவகாரம் : திமுகவை கண்டித்த எடப்பாடி

தங்கலான் – பிரம்மாண்ட வெற்றியா? – திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share