பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதல்வர் விஜய் உத்தரவு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று உடல் நலக்குறைவால் அவரது நீலாங்கரை இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 84.

அவரது மறைவுச் செய்தியை அறிந்த தமிழக முதல்வர் விஜய், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

ADVERTISEMENT

பாரதிராஜாவின் மறைவைத் தொடர்ந்து, திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் அவரது இல்லத்தில் திரண்டு தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமா உலகிற்கு பாரதிராஜா ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share