அதிக சந்தோஷத்தில் அட்லி குடும்பம்: ஏன் தெரியுமா?

Published On:

| By Prakash

இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக விளங்குபவர் அட்லி. ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, இளைய தளபதி விஜய்யை வைத்து ’தெறி’, ’மெர்சல்’, ’பிகில்’ உள்ளிட்ட படங்களை எடுத்து இந்திய அளவில் பிரபலமானார். தவிர அட்லி, ஏ ஃபார் ஆப்பிள் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார்.

ADVERTISEMENT

அவரது தயாரிப்பின் மூலம் ’சங்கிலி புங்கிலி கதவ தொற’, அந்தகாரம் உள்ளிட்ட படங்களையும் எடுத்துள்ளார். தற்போது அட்லி, இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ’ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அட்லி வீட்டில் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆம், இயக்குநர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

ADVERTISEMENT

இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், பிரியா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை, அவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளனர்.

பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”நான் கர்ப்பமாக இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. உங்கள் அன்பும் வாழ்த்தும் எங்களுக்கு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ஜெ.பிரகாஷ்

கலைஞர் பேனா சின்னம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

இந்தியர்களுக்கு 15 நாட்களில் விசா: பிரிட்டிஷ் தூதர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share