பசும்பொன் சென்ற எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் கதையை தான் ஓபிஎஸ் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
ராமநாதபுரம் பசும்பொன்னில் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “எடப்பாடி சென்ற வாகனத்தில் தான் நாங்கள் சென்றோம். இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது என்று தெரியவில்லை.
இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பணம் கொடுத்து இதுபோன்ற செயலை செய்ய சொல்லியிருப்பார்கள். காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருக்க கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஓபிஎஸ் ஏன் இப்படி இரட்டை வேடம் போடுகிறார். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் கதையை தான் ஓபிஎஸ் செய்கிறார். இந்த நாடகமெல்லாம் அதிமுகவிடம் எடுபடாது. ஏற்கனவே பல தோல்விகளை சந்தித்தவர். அவரை நம்ப நாங்கள் தயாராக இல்லை. தேவர் ஜெயந்தி விழாவில் முறையான காவல்துறை பாதுகாப்பு இல்லை” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்: அமைச்சர் பொன்முடி
டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
“நான்தான் மதுரை ஆதீனம்”: நீதிமன்றத்தில் நித்தியானந்தா புது மனு!
ஹெல்த் டிப்ஸ்: மழைக்காலங்களில் நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள 10 டிப்ஸ் இதோ!
