பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு கோல்டன் விசா!

Published On:

| By admin

கொரோனா பொது முடக்கம் உலகம் முழுவதும் முடிவுக்கு வந்த பின் இந்திய நடிகர், நடிகைகளுக்கு ஐக்கிய அமீரக அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். அந்நாட்டில் வாழவும் வேலை செய்யவும் முடியும். பத்து வருடங்களுக்குப் பிறகு விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த விசாவை மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், விஜய்சேதுபதி உட்பட ஏராளமான நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த வரிசையில் தற்போது நடிகர் திலீபுக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது அமீரகம்.திலீப் மீது கேரள மாநில நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார குற்றசாட்டு சம்பந்தமான வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் சிறை செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் திலீபுக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி இருப்பது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் அமீரகத்தின் கோல்டன் விசா என்பது அந்த நாடு அளிக்கும் கவுரவம் ஆகும்.

அப்படி இருக்கும்போது பாலியல் குற்றச்சாட்டில் இருக்கும் ஒருவருக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து அதிருப்தி நிலவுகிறது.

ADVERTISEMENT

**அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share