தீட்சிதர் சஸ்பெண்ட் : அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்? – நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kavi

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிதம்பரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அரசு செவிலியரை தாக்கியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி, நடராஜ தீட்சிதரை பொது தீட்சிதர்கள் குழு சஸ்பெண்ட் செய்தது. இந்த உத்தரவை கடலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்து செய்தார்.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் அறநிலையத் துறை பதிலளிக்க நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இந்த வழக்குகள் மீண்டும் இன்று (அக்டோபர் 21) விசாரணைக்கு வந்தது.

அப்போது பொது தீட்சிதர்கள் குழு தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடராஜர் கோயிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அதில் அறநிலையத் துறை தலையிட முடியாது என வாதிடப்பட்டது.

ADVERTISEMENT

இதை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தீட்சிதர் சஸ்பெண்ட் விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அதேசமயம், கோயில் நிர்வாகத்தில் அறநிலையத் துறை தலையிட அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை இரு நீதிபதிகள் அமர்வு முடிவுக்கு விட்டு விடுவதாகவும் தெரிவித்தார்.

பின்னர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்ட் காலம் முடிந்து விட்டதாகவும், அவர் தில்லை காளியம்மன் கோயிலில் சேவை செய்து வருவதாகவும் பொது தீட்சிதர்கள் குழு தெரிவித்தது.

இதை கேட்ட நீதிபதி, இரு வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மகாராஷ்டிரா தேர்தல்: குழப்பத்தில் இந்தியா கூட்டணி… உள்ளே புகுந்த விசிக – நிலவரம் என்ன?

தங்கலான் ஓடிடி ரிலீஸ்… க்ரீன் சிக்னல் கொடுத்த கோர்ட்!

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share