வைஃபை ஆன் செய்ததும், “வீழ்வேன் என நினைத்தாயோ’ என்ற வரிகளைப் படித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
யாரைய்யா சொல்றீரு? பண்ருட்டியாரையா?
அவருக்கும் பொருந்தும்தான்.. ”88 வயசுல பண்ருட்டி ராமச்சந்திரன் தனிக்கட்சி தொடங்க போறாரு..”ன்னு நாம 10 நாட்களுக்கு முன்னாடியே டிஜிட்டல் திண்ணையில சொல்லி இருந்தோம்.. இல்லையா?
இப்ப நாம சொன்னபடியே பண்ருட்டி ராமச்சந்திரன் தனிக்கட்சியை தொடங்கிட்டாரு.. எம்ஜிஆர் அண்ணா திமுகன்னு கட்சி ஆரம்பிச்சிருக்காரு.. அதோட, “தன்னோட கட்சி தேர்தல்ல போட்டியிடாது.. ஆனா கட்சிகாரங்க சுயேட்சையா போட்டியிடலாம்னு ‘’நூதன’ அறிவிப்பையும் கூட வெளியிட்டிருக்காரு..
அடுத்தது சசிகலாவைப் பத்தி.. அதிமுக- பாஜக கூட்டணிக்கு தன்கிட்ட சொல்லாமலேயே அக்கா மகன் டிடிவி தினகரன் போயிட்டாருங்கிறது சசிகலா கோபம்..
அதிமுக ஆட்சி அமைய பிரசாரம் செய்ய ரெடியா இருக்கேன்னு எடப்பாடிகிட்ட சொல்லி இருந்தாரு சசிகலா.. ஆனா எடப்பாடியோ, இவங்களை இப்ப உள்ளே அனுமதிச்சா நாளைக்கு பிரச்சனையை கிளப்புவாங்கன்னு நினைச்சு ஓகே சொல்லலை..
இதனால சசிகலாவுக்கு ரொம்பா டென்ஷன். இதைத்தான் “புலம்பும் சசிகலா”ன்னு நாம டிஜிட்டல் திண்ணையில சொல்லி இருந்தோம்.. இந்த கோபத்துலதான், ”சட்டசபை தேர்தல்ல எங்க ஆதரவாளர்கள் போட்டியிடுவாங்க”ன்னு சசிகலா அறிவிச்சாங்க.. முதல்ல அந்த அறிவிப்பை, ‘ஏதோ சொல்றாங்க’ன்னுதான் எல்லோரும் பார்த்தாங்க.. இப்ப நிலவரமே வேற..

சசிகலா இப்ப என்னதான் செய்யுறாங்க..
இதை பத்தி சசிகலாவுக்கு நெருக்கமானவங்ககிட்ட கேட்டப்ப, “போயஸ் கார்டன் பங்களாவுல ஆதரவாளர்களை வரவழைச்சு சசிகலா பேசுனாங்க.. அவங்க சிலர்கிட்ட எலக்ஷனில்ல நிற்கிறீங்களான்னும் கேட்டாங்க..
சில பேருகிட்ட உங்க தொகுதியில அதிமுக எப்படி இருக்குது? தினகரன் கட்சி எப்படி இருக்குது?ன்னு கேட்டாங்க..
சசிகலாவை சப்போர்ட் பண்ற சில தொழிலதிபர்கள், அமைப்புகளையும் அழைச்சு பேசுனாங்க..
இந்த எலக்ஷனில்ல நிச்சயம் வேட்பாளர்களை நிறுத்தனும்னு முடிவோட இருக்காங்க..” என்றனர்.
போயஸ் கார்டன் பங்களா ஆலோசனை முடிஞ்சிருச்சா?
ஆமாய்யா.. போயஸ் கார்டன் ஆலோசனையை முடிச்சுட்டு இப்ப சைலண்ட்டா களத்துக்கு போயிட்டாங்க சசிகலா..
இன்னைக்கு தஞ்சாவூர் போயிருக்காங்க.. அங்க சங்கம் ஹோட்டலில்ல ஆதரவாளர்களோட எலக்ஷன் பத்தி டிஸ்கஷன் நடத்தினாங்க..
சசிகலாவோட நெக்ஸ்ட் ப்ளான் என்னவாம்?
சசிகலா என்னதான் செய்யப் போறாங்கன்னு கேட்டப்ப, “நிச்சயமா தனிக்கட்சியைத் தொடங்க போறாங்க.. திவாகரனோட அண்ணா திராவிடர் கழகத்தை பயன்படுத்துவாங்கன்னு சிலர் சொல்றாங்க.. ஆனால் யாரையும் நம்ப சசிகலா தயாரா இல்லை.. அதனால தனிக்கட்சி தொடங்குவோம்னு நினைக்கிறாங்க..
அவங்களைப் பொறுத்தவரைக்கும் 234 தொகுதிகளில்ல கவனம் செலுத்துறதைவிட செல்வாக்கு இருக்குன்னு நம்புற ஏரியாவுல இறங்கலாம்னு நினைக்கிறாங்க.. அப்படி 30 தொகுதிகளை டார்கெட் செஞ்சிருக்காங்க..
டெல்டா, தென் மாவட்டங்களில்லதான் இந்த தொகுதிகள் வருது.. அதிமுக- அமமுகவுக்கு போற ஓட்டுகளை பிரிச்சு தன்னோட செல்வாக்கை காட்டனும்.. அப்படிங்கிறதுதான் சசிகலாவோட திட்டம்.
அண்ணா திமுக மிகப் பெரிய தோல்வியைத் தழுவும் போது கட்சி தன்னோட கைக்கு தானா வந்துடும்.. அதுக்கு இதை ஒரு ஆபரேஷன் மாதிரி செஞ்சே ஆகனும்னு நினைக்கிறாங்க சசிகலா..
சசிகலாவோட இந்த மூவ்ஸ் அறிவாலயத்துக்கும் ரொம்ப ஹேப்பியாம்.. சசிகலா ரோடு ஷோன்னு சில தொகுதிகளில்ல நடத்த இருக்காங்களாம்.. அதனால சசிகலாவோட பிரசாரம், ரோடு ஷோ, பொதுக் கூட்டம் எல்லாத்துக்கும் இடைஞ்சல் இல்லாம பெர்மிஷன் கொடுங்கன்னும் அரசு தரப்புல சொல்லப்பட்டிருக்காம்.. சசிகலாவோட விஸ்வரூபம் எலக்ஷனில்ல எந்த எபெக்ட்டை தரப்போகுதுன்னு எதிர்பார்ப்பா இருக்கும்னு சொல்றாங்க .. என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
