டிஜிட்டல் திண்ணை: விஜய் முடிவால் அதிர்ந்த ஆர்.எஸ்.எஸ்! ”விசில்” சின்னம் கிடைத்த கதை!

Published On:

| By Mathi

Vijay Symbol DT

வைஃபை ஆன் செய்ததும், “காதுகள் ஜாக்கிரதைன்னு 5 மாதங்களுக்கு முன்னர் நாம சொன்னது சரியாத்தான் போச்சு”என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. விஜய்யின் விசில் சின்னத்தை பற்றியா?

ADVERTISEMENT

ஆமாய்யா.. மாமல்லபுரத்தில் இன்னைக்கு தவெக செயல் வீரர்கள் கூட்டத்தை பார்த்தீரா.. கூட்டத்துக்கு வந்த பெரும்பாலானோர் கையில் விசிலோடுதான் வந்தனர்.. விஜய் உள்ளே நுழைஞ்சப்ப, விசில் சப்தம் அதிர வைத்தது.

DT Vijay

ADVERTISEMENT

அட.. மொழிப் போராளிகளுக்கு விஜய் வீரவணக்கம் செலுத்துறப்ப கூட விசில் சப்தம் ஓயலை.. முன்ன எப்போதும் இல்லாத அளவுக்கு மா.செ.க்களை இந்த கூட்டத்துல பேச அனுமதிச்சிருத்தாங்க.. அப்படி ஒவ்வொருத்தரும் பேசும் போதும் ஓய்வே இல்லாமல்தான் விசில் சப்தம் ஒலிச்சுகிட்டே இருந்துச்சு…

சிக்கலே இல்லாம விசில் சின்னத்தை விஜய்க்கு எலக்‌ஷன் கமிஷன் கொடுத்துருச்சே..

ADVERTISEMENT

என்னய்யா நீர்.. அவ்வளவு சீக்கிரமா எலக்‌ஷன் கமிஷனை கொடுக்க வெச்சிருவாங்களா? விசில் சின்னத்தை விஜய்க்கு கொடுத்ததுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்குய்யா..

ஓஹோ.. அது என்னய்யா கதை?

தேர்தல் ஆணையத்துகிட்ட விசில் சின்னத்தை விஜய் கேட்டிருக்காருன்னு நாம போன வருஷம் செப்டம்பரிலேயே சொல்லி இருந்தோம் இல்லையா?

அதுக்குப் பிறகு விசில் சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா?ன்னு கொஞ்சம் தவிப்புலதான் விஜய் இருந்தாரு.. ஆனா திடீர்னு எலக்‌ஷன் கமிஷனோ, விஜய்க்கு விசில சின்னம் கொடுக்கலாம்னு முடிவு செஞ்சிருச்சு.. இதை நாமதான் முதல்ல சொல்லி இருந்தோம்..

எலக்‌ஷன் கமிஷனோட இந்த முடிவுக்கு பின்னாடிதான் ‘அந்த’ கதையே இருக்கு..

அதாவது போன எலக்‌ஷனில சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி ‘விளையாட்டு’ காண்பிச்ச மாதிரி நமக்கும் நடக்குமோன்னு நினைச்சுகிட்டு விஜய் இருந்தாரு..

இது சம்பந்தமா ஒரு டிஸ்கஷன் நடந்துகிட்டு இருந்தப்ப, “விசில் சின்னம் கேட்டிருக்கோம்.. அதை எலக்‌ஷன் கமிஷன் தராம போச்சுன்னா.. நம்மோட வரப் போற காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துலேயே 234 தொகுதிகளிலும் நிக்க வேண்டியதுதான்” என ஒரு முடிவை சொல்லி இருந்தார் விஜய்..

234 தொகுதிகளிலும் கை சின்னத்துல விஜய் நிற்க ப்ளான் போட்டிருக்காருங்கிற தகவல் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ‘தலை’களுக்கும் ரீச் ஆகிடுச்சு.. அவங்களோ, விஜய்யோட இந்த முடிவால அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்க..

”இந்தியா முழுவதும் காங்கிரஸ் இருக்கவே கூடாதுன்னு நாம நினைக்கிறோம்…விஜய் இப்படி ஒரு முடிவெடுத்தா தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸை கொண்டு போய் சேர்த்துடுவாரே”ன்னுதான் பாஜக- ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஜெர்க் ஆகியிருக்காங்க..

அதுக்கு அப்புறம்தான் விஜய் கேட்டபடியே விசில் சின்னத்தை கொடுத்துடலாம்னு முடிவு செஞ்சுங்கா.. அதைத்தான் எலக்‌ஷன் கமிஷனும் செஞ்சிருக்கு.. இப்படித்தான் விஜய்க்கு விசில் கிடைச்சதாம்..

ஆனாலும், பாஜக இப்ப சீரியசா ரெண்டு விஷயத்தை விவாதிச்சுகிட்டு இருக்கு.. ஒன்னு, விஜய்கூட காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்ந்தா நம்ம கூட்டணிக்கு சாதகமா? பாதகமா? அடுத்தது, விஜய் தனிச்சே போட்டியிட்டா நமக்கு சாதகமா?.. இப்படித்தான் பாஜக தரப்பு சீரியசா டிஸ்கஷன் செஞ்சுகிட்டு இருக்கு என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share