வைஃபை ஆன் செய்ததும், “கலங்காதிரு மனமே – உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.\
என்னய்யா.. யாருடைய கனவுகளைப் பற்றி சொல்றீரு?
அரசியல்ல எல்லோருமே கனவு காண்கிறாங்கதானே.. அதைத்தான் சொன்னேன்.. காங்கிரஸ்- திமுக கூட்டணியில இருந்து ஆரம்பிக்கிறேன்..
திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிருச்சு; சோனியா- கார்கே . ரெண்டு பேருமே ஸ்டாலின்கிட்ட அடுத்தடுத்து பேசுனாங்கன்னு நேத்து நாம சொல்லி இருந்தோம்.. திமுக- காங்கிரஸ் கூட்டணி கன்ஃபார்ம் ஆனதாலதான் பிரேமலதாவும் உடனே கூட்டணியில இணைஞ்சுட்டாங்கன்னு சொன்னோம் இல்லையா?
டெல்லியில என்ன தான் நடந்துச்சுன்னு விசாரிச்சப்ப, “சோனியா காந்தி, செவ்வாய்க்கிழமையன்னைக்கு ஸ்டாலின் கிட்ட பேசுனாரு.. மறுநாள் புதன்கிழமை கார்கேவும் ஸ்டாலின்கிட்ட பேசியிருந்தாரு.. இல்லையா? அதுக்கு முன்னாடி, ராகுல் காந்திகிட்ட. “நமக்கு திமுக கூட்டணிதான் சரியா வரும்னு” சோனியா காந்தி தெளிவாக சொல்லிட்டாங்க..
அதுக்கு அப்புறமா ராகுல் காந்தியும் கார்கேவும் நேத்து சுமார் 1 மணிநேரத்துக்கும் மேல தமிழ்நாட்டு அரசியலைப் பத்திதான் தீவிரமா டிஸ்கஷன் செஞ்சாங்க.. இந்த டிபேட் ரொம்பவே ஓபனாவும் இருந்துச்சு.. காரசாரமாவும் இருந்துச்சு..
கார்கேகிட்ட, “ஆட்சியில பங்கு கொடுங்கன்னு நாம கேட்கிறோம்.. ஆனா திமுக முடியவே முடியாதுன்னு சொல்றாங்களே… அப்ப நம்ம கட்சி வளரவே கூடாதுன்னு திமுக நினைக்குதா? திமுக ஏன் ஆட்சியில பங்கு தர முடியாதுன்னு சொல்லுது?
கூட்டணி ஆட்சிங்கிறது எல்லா இடத்துலயும் இருக்கிறதுதானே.. போன டைம் லோக்சபா எலக்ஷன்ல மோடிக்கு ஃபுல் மெஜாரிட்டி இருந்துச்சு.. ஆனாலும், ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி போன்றவங்களை அமைச்சரவையில சேர்த்துகிட்டாருதானே..
ஆந்திராவுல கூட சந்திரபாபு நாயுடுவுக்கும் பெரும்பான்மை இருக்குது.. ஆனாலும் பவண் கல்யாணுக்கு டெபுடி சிஎம் போஸ்ட் கொடுத்திருக்காருதானே..
கேரளாவுல எப்பவுமே கூட்டணி ஆட்சிதான்னே இருக்கு.. பக்கத்து ஸ்டேட்ஸ் எல்லாத்துலயும் கூட்டணி ஆட்சிங்கிற போது தமிழ்நாட்டுல மட்டும் ஏன் அது முடியாதுன்னு சொல்றாங்க? நம்ம கட்சி வளரும்னுனா ஆட்சியில பங்கு அவசியம்தானே”?ன்னு ராகுல் காந்தி கேட்டாரு..
இதுக்கு பதில் சொன்ன கார்கே, நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எப்பவுமே கூட்டணி ஆட்சியை ஒத்துக்கிறதே இல்லையே… கூட்டணி ஆட்சியை நிராகரிக்கிற ஸ்டேட்டா தமிழ்நாடு இருக்குதே”ன்னு சொல்லி இருக்காரு..
இப்படியே ரெண்டு பேரும் பேசு முடிக்கிறப்ப ராகுல் காந்தி சிரிச்சுகிட்டே, “தமிழ்நாட்டுல நம்ம கட்சி வளரும்னுங்கிறதுக்கு என்ன செய்யனுமோ அதை செய்யுங்க.. சீட்டையாவது அதிகமாக வாங்கிடனும்.. அதுலயாவது உறுதியா இருங்க”னு கார்கே கிட்ட சொன்னாரு
இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுறப்ப, “சோனியா முதல்நாள் பேசுனாங்க..அடுத்த நாள் கார்கேவும் பேசுனாரு.. அப்ப, “ஆட்சியில பங்கு”ங்கிறதை பேச வேண்டாம்.. அதே நேரத்துல “அதிகாரத்துல பங்கு”ன்னு பேசுவோம்னு சிஎம் சொன்னாரு..
கார்கேவுக்கு டக்குன்னு புரிபடலை போல.. அதனால , “அமைச்சரவையில பங்கு அப்படிங்கிற சப்ஜெக்ட்டே வேண்டாம்.. அதுக்கு பதிலா, உள்ளாட்சி அமைப்புகளில்ல அதிகமான இடங்கள் பத்தி பேசலாம்.. அரசு வழக்கறிஞர்கள்- வாரிய தலைவர்கள்- கூட்டுறவு பதவிகள்னு நியமன பதவிகளை கேளுங்க.. அதை பத்தி பேச்சுவார்த்தை நடத்தலாம்”னு சொன்னாரு… இதுக்கு கார்கே ஓகே சொல்லிட்டாரு” என்றனர்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி கன்ஃபார்ம் ஆகிடுச்சு.. சிக்கல் இல்லைங்கிற தகவல் பிரேமலதாவுக்கு பாஸ் ஆன உடனே, அண்ணா அறிவாலயத்துக்கு வந்து சிஎம்மை சந்திச்சு கூட்டணியில தேமுதிக இணைஞ்சிருச்சுன்னும் அறிவிச்சாங்க..
சிஎம்மை பிரேமலதா சந்திச்சு கூட்டணியில இணைஞ்ச பிறகுதான் காங்கிரஸ் கட்சியில பலருக்குமே, எல்லாமே சுமூகமாக போகுதுங்கிற விஷயமே புரிஞ்சது.. ரொம்பவே ஹேப்பியாகிட்டாங்க..
சரிய்யா.. தேமுதிகவை அதிமுக, பாஜக ரொம்பவே விமர்சிக்கிறாங்களே..
ஆமாய்யா.. எடப்பாடி, “தோற்கப் போற கூட்டணி”ன்னு சொன்னாரு.. பாஜகவோ, “விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது”ன்னு சாபம் கொடுத்துச்சு..
அதிமுகவுல கேபி முனுசாமி போன்றவங்க, “தேமுதிகவையும் நம்ம கூட்டணிக்கு கொண்டு வந்துடனும்.. அப்படி அவங்க வந்துட்டா நிச்சயமா நாம ஈஸியா ஜெயிச்சுடுவோம்”னு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தாங்க.. இப்ப திமுக கூட்டணிக்கு தேமுதிக போனதுல கேபி முனுசாமி போன்றவங்க எல்லாம் ரொம்பவே அப்செட்தான்..
அதே மாதிரி அறிவாலயத்துல பிரேமலதா, ஸ்டாலினை சந்திச்சு பேசுற தகவல் தெரிஞ்சதும் தலைமை செயலகத்துல தன்னோட எதிர்க்கட்சித் தலைவர் ரூமில் எடப்பாடி ரொம்பவே இறுக்கமா இருந்தாரு..
அங்க நடந்த விஷயங்களை எடப்பாடிக்கு நெருக்கமானவங்ககிட்ட கேட்டப்ப, “அறிவாலயத்துல ஸ்டாலினை பிரேமலதா சந்திச்சு பேசுறாங்கன்னு தகவல் தெரிஞ்சதுல இருந்தே எடப்பாடி ரொம்பவே அப்செட்டா இருந்தாரு.. முகமெல்லாம் ரொம்ப கடுகடுன்னு இருந்துச்சு.. எஸ்பி வேலுமணியை கூப்பிட்டு பேசுனாரு..
அப்ப எஸ்பி வேலுமணி, “நாம 7 தொகுதிகள்+ 1 ராஜ்யசபா சீட்டுன்னு கடைசியாக பேசி வெச்சிருந்தோம்.. ஆனா திமுக 10 தொகுதிகள்+ 1 ராஜ்யசபா சீட்டுன்னு பேசி முடிச்சுருக்காங்க.”ன்னு சில விஷயங்களை ஷேர் செஞ்சாரு…
அதுக்கு அப்புறமா, “சரிங்க.. அவங்க அங்க போயிட்டாங்க.. தெக்கேயாவது பேலன்ஸ் பண்ற மாதிரி டாக்டர் கிருஷ்ணசாமிகிட்ட பேசுங்க”ன்னு எஸ்பி வேலுமணி கிட்ட சொன்னாரு எடப்பாடி” என்றனர்.
டாக்டர் கிருஷ்ணசாமியா? விஜய்கிட்ட 10 சீட் கேட்டுகிட்டு இருந்தாரே?
ஆமாய்யா.. பாஜக கூட்டணியில தொடர்ந்து இருக்க டாக்டர் முயற்சி செஞ்சாரு.. ஆனா ஜான்பாண்டியன் இருக்கிறதால டாக்டருக்கு பாஜக சிக்னல் தரலை..
அதனால விஜய்கிட்ட பேசுனாரு டாக்டர்.. மொத்தமா 10 தொகுதி கேட்டாரு.. அதாவது பொது தொகுதியில 5; ரிசர்வ் தொகுதியில 5 -ன்னு விஜய்கிட்ட டாக்டர் கேட்டு பேசிகிட்டு இருந்தாரு..
இதுக்கு இடையில நேத்து எஸ்பி வேலுமணி, டாக்டரை போனில பிடிச்சு பேசி அவரை நேர்ல போய் சந்திச்சாரு..
இதை பத்தி டாக்டர் கிருஷ்ணசாமி தரப்புல விசாரிச்சப்ப, “எஸ்பி வேலுமணி, டாக்டரை சந்திச்சு பேசுனாரு..” நாங்க 10 தொகுதிகளை விஜய்கிட்ட கேட்டிருக்கிறோம்னு டாக்டர் சொன்னாரு..
அதுக்கு எஸ்பி வேலுமணி, “அவ்வளவு எல்லாம் நாங்க தர முடியாதுங்க டாக்டர்.. உங்களுக்கும் பையனுக்கும் சேர்த்து 2 சீட் கன்ஃபார்மா தர்றோம்.. தேர்தல் செலவுகளையும் பார்த்துக்கிறோம்” என அழுத்தமாக சொல்ல டாக்டரும் இழுத்து
பிடிச்சு கூடுதல் சீட்டுக்கு பேசியிருக்காரு..
இதுக்கு அப்புறமா எடப்பாடிகிட்ட பேசுன வேலுமணி, டாக்டர் ஓகே சொல்றாருன்னு சொன்னதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் பொனது வாட்ஸ் ஆப்.
