வைஃபை ஆன் செய்ததும் விஜய் கட்சியின் மதுரை மாநாட்டு வளாகத்தில் இருந்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
செம்ம மாஸா விஜய் கட்சியின் மதுரை மாநாடு?
ஆமாம்..
சரி.. சரி .. மாநாட்டின் ஒவ்வொரு அம்சமாக சொல்லுமய்யா..
மாநாடு நடத்துவதற்காக மொத்தமாக ரெடி செஞ்சதுன்னு பார்த்தா 350 ஏக்கர் நிலம். இதில் 68.87 ஏக்கர் நிலத்தில்தான் பார்க்கிங், மேடை, சேர்கள் எல்லாம் போடப்பட்டிருந்தது.
ஓஹோ..

நாம ஒருத்தர் சேர் போட்டு உட்கார 4 சதுர அடி இடம் தேவை. மாநாட்டில் சேர்கள் போடப்பட்ட இடம் 30 லட்சம் சதுர அடி.. இந்த கணக்குப்படி 7.50 லட்சம் பேர் உட்காரலாம்.. ஆனால் போட்டிருந்த சேர்கள் 1.75 லட்சம்.. அதில் உட்கார்ந்தது, நாம பார்க்க மாநாட்டுக்கு வந்து போனவங்க, ஒதுங்கி நின்றிருந்தவங்க என கணக்குப் போட்டா 2.5 லட்சத்துல இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும்.
பார்க்கிங் ஏரியா மட்டுமே 25 ஏக்கர்.. வந்த கார், வேன்கள், பஸ்கள், டூவிலர்கள் எல்லாம் 9,000 வண்டிகள் இருக்கும். அதுவும் ஒர்க்கிங் டே வியாக்கிழமை நாளில் இத்தனை வண்டிகளில், 3 லட்சம் பேர் திரண்டு வந்ததில் விஜய்க்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.. மேடையில் பேசி முடிச்சுட்டு கேரவனுக்கு திரும்பும் போது முகமெல்லாம் பூரிப்போடுதான் இருந்தார் விஜய்.

அப்புறம்.. இருக்காதா? மாநாட்டுக்கு வந்தவங்க எல்லாம் இளைஞர்கள்தானா?
நாம பார்த்தவரைக்கும் 18 வயசில் இருந்து 40 வயது வரைக்குமானவங்க மட்டுமே 55% பேர் இருப்பாங்க.. ஓட்டுப் போடுற வயசுக்கு கீழே இருந்தவங்க 15%.. 40 முதல் 60 வயது வரைன்னு பார்த்தா 30% இருக்கும்.. அப்படின்னா இளைஞர்கள் பட்டாளம்தான் படையெடுத்து வந்ததுன்னு சொல்லலாம். இதில் ஆண்கள்தான் ரொம்ப அதிகம். விஜய்யின் ‘நண்பிகள்’ / ‘தோழிகள்’ – பெண்கள் கூட்டம் குறைவுதான்.
இவங்க மட்டுமா? லைவ்வாக டிவி, யூடியூபில் பார்த்தவங்க எல்லாம் கணக்கு சேர்த்தா?
அடேங்கப்பா..தவெகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் மட்டும் 11 லட்சம் பேர் மாநாட்டை லைவ்வா பார்த்தாங்க. இதை தாண்டி டிவி சேனல்கள், யூடியூப் சேனல்கள் எல்லாத்துலயும் பார்த்தவங்க கணக்கு போட்டா சுமார் 1 கோடியைத் தாண்டுமே அப்பு..

அப்படின்னா மாஸ் ரீச்தானப்பு.. மாநாட்டு செலவு எல்லாம் எப்படி?
மாநாடு ஏற்பாடுகள் எல்லாம் பக்காவா செஞ்சிருந்தாங்க.. ஆதவ் அர்ஜூனதான் பல கோடி ரூபாய் செலவழிச்சிருக்காரு.. அத்துடன் தன்னோட கம்பெனி பணியாளர்களை வைத்து 25 டீம் போட்டு மாநாட்டு ஏற்பாடுகளை கச்சிதமாக செஞ்சிருந்தாரு.. ஏற்பாடுகளை எல்லாம் பார்க்கும் போது ரொம்பவே Professional-ஆகத்தான் இருந்தது.
மாநாட்டு மேடைக்கு பின்னால் நேற்று ரொம்ப சத்தமா இருந்துச்சாமே?
அக்கப்போர் இல்லாமலா இருக்கும்? விஜய்-க்காக ஒரு கேரவன், அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரு கேரவன், விஜய் நண்பர்களுக்கு என 3 கேரவன்கள் என மொத்தம் 5 கேரவன்கள் ரெடியாகி இருந்தது..
நேற்று இரவும் கூட கேரவன் ஏரியாவிலதான் மாநாட்டுல யார் யார் பேசுறதுன்னு ஒரே குழப்பம்தான்.. அதில்தான் ஆதவ் அர்ஜூனாவும் அருண்ராஜூம் ஓவராக சத்தம் போட்டுவிட்டனர்..
ஆதவ் அர்ஜூனாவைப் பொறுத்தவரையில் இத்தனை கோடி செலவு செஞ்சிட்டு மாநாட்டுல பத்தோடு பதினொன்னா தீர்மானத்தை மட்டும் வாசிக்கலாம்னு சொன்னா எப்படின்னு டென்ஷனாகிட்டாரு.. அருண்ராஜூம், எவ்வளவோ பெரிய பதவியை விட்டு வந்து இப்படி பேசவிடாம செஞ்சா சரியான்னு? குமுறியிருக்கார்..
ஜான் ஆரோக்கியசாமிதான் யாருமே பேச வேணாம்.. விஜய் மட்டும் பேசட்டும் என ‘மட்டையை’ போட்டவராம்.. அதனால்தான் ஆதவும் அருண்ராஜூம் ரொம்பவே பொங்கிட்டாங்க..
விவகாரம் சீரியசாகப் போக, தேர்தல் குழுவில் இருக்கிற விஷ்ணு ரெட்டிதான் விஜய்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்..
இதற்கு பிறகுதான், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா எல்லாம் பேச அனுமதிச்சாங்க.. ஆதவ் அர்ஜூனா மற்றவங்களை விட சில நிமிடம் கூடுதலாக மொத்தம் 7 நிமிடம் பேசினார்.

100 அடி கொடி மரம் கீழே விழுந்ததே அதுபற்றி பேசலையா யாரும்?
அதெப்படி பேசாம இருப்பாங்க.. கொடி மரமே சாஞ்சுருச்சு.. அப்படின்னா அரசனோட மணிமகுடமே சரிந்தது போலத்தான் என ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் இடைவிடாமல் வந்து விழ விஜய் செம்ம அப்செட்.. ஆனால் அப்பா எஸ்.ஏ.சிதான், நேற்று கேரவனில் பேசிகிட்டு இருக்கும் போது, “அப்படி எல்லாம் நினைக்காதப்பா.. இது ஒரு கண் திருஷ்டிமாதிரி நினைச்சுக்க.. பாசிட்டிவா எடுத்துக்கோ” என அன்பாக அட்வைஸ் செய்தாராம்.
விஜய் பேச்சுக்கு மாநாட்டில் என்ன ரியாக்ஷன்?
விஜய் நேற்று இரவு முதலே தம்முடைய பேச்சை கேரவனில் அமர்ந்து பலமுறை ரிகர்சல் செஞ்சு பார்த்துகிட்டே இருந்தாரு.. அதனால்தான் பேப்பர் கையில் இருந்தும் சரளமாக பேசினார்.. அடுக்கு மொழியும் அசால்ட்டா உருண்டு ஓடியது..
மேடையில் பேசி முடிஞ்சு கேரவனுக்கு திரும்பும் போது, ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, அருண்ராஜூ என சுற்றி இருந்தவர்களிடம் பேச்சு எப்படி இருந்ததுன்னு கேட்க, எல்லோருமே ஆஹோ ஓஹோன்னு பாராட்டி தள்ளிவிட்டனர்.

மாநாட்டு தீர்மானங்களை எல்லாம் வாசிக்கவே இல்லையே?
விஜய் மாநாட்டை 2 மணிநேரத்தில் முடித்தே ஆகனும் என்பதில் உறுதியாக இருந்தார். இதில்தான் விஜய் மட்டும் பேசட்டும்.. மற்றவங்க எல்லாம் தீர்மானம் வாசிக்கட்டும் என ஜான் சொல்லி இருந்தார்.. இதுக்குதான் ஆதவ், அருண்ராஜ் கடுப்பானாங்க.. மேடையில் ஆதவ், அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் பேசி முடிச்சதால விஜய் 40 நிமிடம் பேசினார். இதனால தீர்மானங்களை வாசிக்காமலேயே மாநாட்டை முடிச்சுட்டாங்க..
மாநாட்டு கூட்டம் பற்றி என்ன கருத்து சொல்றாங்க?
மாநாட்டுல கூட்டத்தைப் பார்த்த உடன் விஜய் அம்மா ஷோபா, “இவ்வளவு இளைஞர்கள் கூடியிருக்காங்க.. இதை பார்க்கும் போது “நாமும் அண்ணா திமுகவும் கூட்டணி வைச்சா அடுத்து நம்ம ஆட்சி அமைச்சிடலாம்” என தம்முடன் இருந்தவர்களிடம் ரொம்ப நம்பிக்கையாக சொன்னதை கேட்க முடிந்தது என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
