வைஃபை ஆன் செய்ததும் டாஸ்மாக் ரெய்டு தொடருகிறது, லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை என ரெய்டு செய்திகள் படபடவென வரிசை கட்டின. digital thinnai : dmk move against admk after raid
பரபரப்பான, சுவாரசியமான ரெய்டு செய்திகளை படித்தபடியே வாட்ஸ் அப் மேசேஜை டைப் செய்ய தொடங்கியது.
அதிமுக முன்னாள் அமைச்சரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும் தற்போது அமமுக துணைப் பொதுச்செயலாளருமான ரங்கசாமி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ, உசிலம்பட்டி நீதிபதி ஆகியோர் வீடுகளில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தினர்.
அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன்; தற்போது ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். சேவூர் ராமச்சந்திரன் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். digital thinnai : dmk move against admk after raid

அமமுக துணைப் பொதுச்செயலாளரும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரங்கசாமி, தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் நகரில் வசித்து வருகிறார். எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.49 கோடி சொத்து குவித்ததாக ரங்கசாமி, மனைவி இந்திரா, மகன் வினோ பாரத் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சோதனையை நடத்தினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் உசிலம்பட்டி நீதிபதி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இப்படி அதிமுகவினரை குறிவைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென ரெய்டு நடத்தி வருவது பற்றி கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது, 2021-ல் திமுக ஆட்சி அமைந்த போதே அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலர் மீதும் இப்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு போடுவார்கள்; அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் சிறைக்கும் போகும் நிலைமை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, கடந்த காலங்களைப் போல இப்படி ஆட்சி மாறிய உடன் நடவடிக்கை எடுக்கும் போக்கு வேண்டாம்.. தவிர்த்துவிடுவோம் என கூறிவிட்டாராம். அத்துடன் அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்பட்ட திறமையான அதிகாரிகளுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டதாம்.
இதனால் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளால் சிறைக்கு போவோமோ என அச்சப்பட்ட அதிமுக மாஜிகள் பலர் மீதும் எந்த நடவடிக்கையும் பாயாமல்தான் இருந்தன. கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக மாஜி அமைச்சர்கள் நிம்மதியாகத்தான் வலம் வந்தனர். digital thinnai : dmk move against admk after raid

ஆனால் தற்போது நிலைமை வேறாகிவிட்டதாம். திமுகவின் சீனியர் அமைச்சர்களை குறிவைத்து இடைவிடாமல் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனைகளுக்கு காரணமே அதிமுகதான் என முதல்வர் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டுள்ளதாம். குறிப்பாக திமுகவின் அமைச்சர்கள் உட்பட 9 பேர் தொடர்பான விவரங்களை டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்துதான் பைல்கள் அனுப்பி வைக்கப்பட்டன என நம்பத்தகுந்த சோர்ஸ்கள் தெரிவித்தனவாம்.
அத்துடன் தற்போது தூய்மைப் பணியாளர் திட்ட முறைகேடு உள்ளிட்ட திடீரென திமுக அரசுக்கு நெருக்கடி தரும் வழக்குகளின் பின்னணியிலும் அதிமுக ‘பெருந்தலைகள்’ இருப்பதாக திமுக தலைமைக்கு தெரிய வந்ததாம்.
இதனால்தான், இவர்களை நாம் விட்டு வைத்தால் நம்மைப் போட்டுக் கொடுக்கிறார்களே என்கிற கோபத்தில் தற்போது திமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை, அதிமுகவினர் மீது பாய்ச்சலைக் காட்டி வருகிறது என்கின்றனர். இந்த ரெய்டு விவகாரம் வரும் நாட்களில் ‘வேற லெவலை’ எட்டப் போகிறது என்கின்றனர் கோட்டை அதிகாரிகள்.
அடுத்ததாக, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த சோதனைகளை வழக்கம் போல திமுக கண்டித்து அறிக்கைவிட்டுள்ளது. இன்று அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட கண்டன அறிக்கையில், அரசியல் உள்நோக்கத்தோடு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அரசு ஊழியர்களை துன்புறுத்துகிறது. அதிமுக ஆட்சியில் பதிந்த வழக்குகளை வைத்து திமுக ஆட்சியில் முறைகேடு நடந்ததுபோன்று சித்தரிக்கிறது அமலாக்கத்துறை. கடந்த மாதம் நடந்த அமலாக்கத்துறை சோதனையிலும் எந்த வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஆனால் ரூ.1000 கோடி ஊழல் நடந்ததாக கற்பனை செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது என தெரிவித்துள்ளார். digital thinnai : dmk move against admk after raid

அமலாக்கத்துறை வட்டாரங்களோ, டிஜிட்டல் ஆவணங்களின் அடிப்படையில்தான் தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் விசாரணையை நடத்தி வருகிறோம். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான மதுபான ஊழல் வழக்கில் ‘ஃபேஸ் டைம்’ (Face Time) ஆதாரங்களை வைத்துதான் பிஆர்எஸ் கவிதா உள்ளிட்டோரை சிறைக்கு அனுப்ப முடிந்தது. இதேமாதிரிதான் வாட்ஸ் அப் உரையாடல்களை கண்காணிக்க முடியாது என நினைக்கின்றனர். இத்தகைய டெக்னாலஜிக்கள் உரையாடல்களுக்கு எல்லாம் எளிதாக அனுமதி கிடைக்காதுதான். ஆனால் தேசப் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஒரு மாநிலத்துக்கு இத்தனை பேர் என லிமிடெட் அளவில் அனுமதி பெற்று கண்காணிக்க முடியும். ஆகையால் டிஜிட்டல் ஆவணங்கள்தான் இனி முக்கிய வழக்குகளில் சாட்சியமாக இருக்கும் என்கின்றனர்.
இன்னொரு சுவாரசிய தகவலும் அமலாக்கத்துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது. அதாவது டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன், ‘K smart’ கேசவன், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் அண்ணாநகர் தேவகுமார், மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமார், SNJ மதுபான நிறுவன மேலாளர் மேகநாதன், தொழிலதிபர் பாபு, எம்.ஆர்.சி நகர் ரதீஷ் வேலு உள்ளிட்டோரின் வீடுகளில் இன்றும் சோதனை நடைபெறுகிறது. இதில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள ரிதீஷ் அப்பார்ட்மெண்ட்டுக்கு கடந்த ஓராண்டாக வந்து போன கார்கள், அவர்களில் ரிதீஷ் வீட்டுக்கு வந்து போன பிரமுகர்கள் விவரங்களைத்தான் தற்போது சிசிடிவி பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறதாம் அமலாக்கத்துறை.
மேலும் தற்போதைய நிலையில் ரிதீஷ் வீட்டில் இல்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் ‘ தொடர்பு எல்லைக்கு’ அப்பால் இருப்பதாகவே செய்திகள் வருகின்றனவாம். இதனால் ரிதீஷ், ‘லைனுக்கு’ வரும் வரை மற்றவர்கள் வீடுகளிலும் சோதனை நீடிக்கும் என்கிற தகவலை சொல்லியிருக்கிறார்களாம். இதுவரை 3 இடங்களில் ரெய்டு முடிந்துவிட்டதாம். எஞ்சிய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரிதீஷ் வராத நிலையில் இந்த சோதனைகள் நாளையும் தொடர வாய்ப்பிருக்கிறதாம். ரிதீஷ் வீட்டில் இல்லாததால் அவரது வீட்டை பூட்டி சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் ரிதீஷோ, அனைவரது வீடுகளிலும் ரெய்டு முடியட்டும்.. நான் லைனுக்கு வருகிறேன் என்கிறாராம்.. இப்படி ரிதீஷும் அமலாக்கத்துறையும் மாறி மாறி கண்ணாமூச்சி ரே..ரே விளையாடி வருகின்றனராம்.
அமலாக்கத்துறையிடம் இருக்கும் முக்கிய ஆவணங்களே, மதுபான தயாரிப்பு நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த ‘ரகசிய குறிப்புகள்’தானாம். இந்த ரகசிய குறிப்புகளை வைத்துதான் டாஸ்மாக் எம்டி விசாகனிடம் விசாரணையை துருவி துருவி நடத்தி வருகிறோம். நேற்று போலவே இன்றும் விசாகனை விசாரணைக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், உங்களுக்கும் ரிதீஷுக்கும் என்ன தொடர்பு? துணை முதல்வர் உதயநிதியை சந்தித்தீர்களா? எத்தனை முறை எதற்காக சந்தித்தீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர் என்கின்றன அமலாக்கத்துறை வட்டாரங்கள் என்ற தகவலை டைப் செய்துவிட்டு இறுதியாக Sent பட்டனை தட்டிவிட்டது வாட்ஸ் அப். digital thinnai : dmk move against admk after raid