வைஃபை ஆன் செய்ததும், அரசியல் ஆடுகளத்துல எப்ப வேணும்னாலும் எதுவும் நடக்கும் என்பதே நிதர்சனம்” என்றபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா.. ஏதோ ரொம்பவே சீரியசான அரசியல் மேட்டர் போல?
அரசியல்னாவே சீரியஸ்தானே. அண்மையில காங்கிரஸின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சந்திச்சு பேசுனாரு இல்லையா.. நாமும் அதைப் பத்தி சொல்லி இருக்கிறோம்..
இந்த சந்திப்பால திமுக செம்ம கோபத்தில் இருக்கிறதாம். இதை பத்தி திமுக மூத்த அமைச்சர்கள் கிட்ட பேசுனப்ப, ”பிரவீன் மீது இன்னமும் ஏன் காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்காமலே இருக்கு?ன்னுதான் தெரியலை.. காங்கிரஸ் மேலிடமே இந்த ஆட்டத்தை ஆடுதான்னும் டவுட்டாவே இருக்கு..
காங்கிரஸ் கட்சியில ஒரு செக்ஷனை இப்படி எல்லாம் பேசவோ செயல்படவோ அனுமதிச்சா நாமதான் ரொம்பவே அனுபவிக்கனும்.. ஏற்கனவே 1996-ல் இப்படித்தான் காங்கிரஸ் மேலிடம், அதிமுகவுடன் கூட்டணின்னு அறிவிச்சது.. ஆனால் ஜிகே மூப்பனார் ஆதரவாளர்கள் அப்ப நரசிம்மராவ் கொடும்பாவி எரிச்சு போராட்டம் எல்லாம் செஞ்சாங்க.. மூப்பனார் தலைமையில் காங்கிரஸே பிளவுபட்டு தமாகான்னு உருவாகி நம்ம கூட கூட்டணி வெச்சாங்க.. இதெல்லாம் வரலாறாக இருந்தாலும் எங்களுக்கான எச்சரிக்கைதானே..
இப்ப அதே போல, நாமும் காங்கிரஸ் கட்சியை பற்றி அலட்டிக்காம விட்டுகிட்டே இருந்தா எலக்ஷன் நேரத்துல காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருந்தே திமுகவுக்கு நெருக்கடி வந்துரும்.. காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு குரூப் சில வேலைகளை செய்யக் கூடும்.. அதனாலதான் உடனடியாக இப்படியான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வெச்சே ஆகனும்னு சிஎம் ஸ்டாலின்கிட்ட சொல்லி இருக்கிறோம்” என்கின்றனர்.
இதை பத்தி சிஎம் ஸ்டாலினும் டீட்டெய்லா
ஆலோசனை நடத்தி இருக்காரு.. அந்த ஆலோசனையில கூட, “காங்கிரஸ் கட்சி நம்ம கூடத்தான் கூட்டணியில நீடிக்கும்.. அதுல எந்த சந்தேகமும் இல்லை..இருந்தாலும் இது என்னன்னு பார்ப்போம்” என சொல்லி இருக்கிறாராம்.
இதுக்கு பிறகுதான் மல்லிகார்ஜூன கார்கேவிடம் விஜய்யுடனான பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பை பத்தி சொல்லி இருக்கிறாரு திமுக சீனியர் எம்பி டிஆர் பாலு. கார்கேவும் அப்படியா? என்னன்னு பார்க்கிறேன்னு சொல்லிவிட்டிருக்காரு..
இந்த தகவல்களை நமக்கு ஷேர் செஞ்ச டெல்லி காங்கிரஸ் சீனியர்கள், “தனிப்பட்ட பிரவீன் காந்தி போய் விஜய்கிட்ட பேசியிருந்தா இந்நேரம் நடவடிக்கை எடுத்திருப்பாங்க.. ஆனால் பிரவீனை அனுப்பினதே பார்ட்டி சீனியர் லீடர் கேசி வேணுகோபால்தான்.. அதுவும் கேசி வேணுகோபால்தான் இப்ப காங்கிரஸ் கட்சியையே ரன் பண்றவரா இருக்கிறாரு..
முன்னாடி அகமது பட்டேல் இருந்தவரைக்கும் பார்ட்டியை ரன் பண்ணினாரு.. அவரை மீறி யாரும் செயல்பட முடியாத நிலை.. அவருக்குப் பிறகு சோனியா மேடம், பார்லிமெண்ட்டுக்கு வந்து போறதுடன் சரி.,. பார்ட்டி விவகாரங்கள், கூட்டணி பஞ்சாயத்து எதுலயும் தலையிடுறதே இல்லை.. பிரியங்கா காந்தியும் கூட எப்போதாவதுதான் சில விஷயங்களில் தலை காட்டுறாங்க..
கார்கேஜி பெயரளவுக்குதான் காங்கிரஸ் கமிட்டி தலைவர்.. கேரளா சிஎம் ஆகனும்னு ரொம்பவே மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறாரு கேசி வேணுகோபால்..
விஜய் ரசிகர்களின் ஓட்டும் நமக்கு இருந்தா கேரளாவில் அமோகமாக ஜெயிக்கலாம்; முதல்வராகிடலாம்னு கால்குலேஷன் போட்டுதான் பிரவீனை அனுப்பி வெச்சாரு கேசி வேணுகோபால்.. திமுககிட்ட பேச்சுவார்த்தை நடத்திகிட்டே விஜய்கிட்ட பேசுனது சரியானது இல்லைதான்.. ஆனாலும் அனுப்பி வைச்சதே கேசி வேணுகோபால்தான் என்கிற போது எப்படி நடவடிக்கை எடுப்பாங்க?” என்கின்றனர்.
அத்துடன், ”விஜய்கிட்ட 60 சீட் கேட்டு நிப்போம்.. நமக்கு எந்த கூட்டணியில இருந்தாலும் வர்ற ஓட்டு வரத்தான் போகுது.. ஒருவேளை விஜய் கூட்டணி ஒர்க் அவுட் ஆச்சுனா கூட்டணி ஆட்சியில இணைவோம்தானே..
திமுகவையும் கூட முழுசா நம்பக் கூடாது.. இந்த முறை திமுக மெஜாரிட்டியோட ஜெயிச்சுருச்சுன்னா நிச்சயம் பாஜகவுடன் இணக்கமாக போகத்தான் நினைப்பாங்க.. அவங்களுக்கு ஸ்டேட் கவர்மென்ட்டை ஸ்மூத்தா ரன் பண்ணியாகனும்னு நெருக்கடி. அப்ப நம்மை தனிச்சுவிட்டுரும் திமுக..அதனால வேற ஆப்ஷனை யூஸ் பண்றது சரிதானேன்னு ராகுல் காந்தியையும் கேசி வேணுகோபால் கவீன்ஸ் செஞ்சுகிட்டே இருக்கிறார்” என்கின்றனர் அந்த காங்கிரஸ் சீனியர்கள்.
காங்கிரஸ் கட்சியிலேயும் சில மூத்த தலைவர்கள், கேசி வேணுகோபாலின் இந்த டபுள் சைடு பேச்சுவார்த்தை கேமை ரசிக்கலையாம்.. இதுல முன்னாள் மத்திய அமைச்சரான சீனியர் லீடர் ப.சிதம்பரம் கார்கேவை நேரில சந்திச்சு, “தமிழ்நாட்டுல திமுக கூட்டணிதான் நமக்கு சரியா வரும்.. திமுக கூட்டணியில இருக்கிறதாலதான் நமக்கும் அசெம்பிளியோ, பார்லிமெண்ட்டோ கவுரவமான எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கிடைச்சுகிட்டு இருக்கு.. இதை கெடுத்துகிட்டு விஜய்கிட்ட போய் பேச்சுவார்த்தை நடத்துனா எப்படி சரியா வரும்னு?” வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து பேசி இருக்கிறார்.
ஓஹோ.. காங்கிரஸ்- திமுகவின் இந்த விவகாரங்களை பாஜக எப்படி பார்க்குதாம்யா?
காங்கிரஸ் மீது திமுக கடும் கோபத்தில் இருக்குற சூழலை மெல்ல மெல்ல பயன்படுத்த பாஜக பார்க்கிறதாம்..
நாடாளுமன்ற செசஷனில் பங்கேற்ற திமுக சீனியர் எம்.பிக்கள் சிலரை பாஜகவின் மூத்த அமைச்சச்ர்கள் சந்திச்சு பேசியிருக்காங்க.. இந்த பேச்சுதான் இப்போ டெல்லி திமுக எம்.பிக்களிடையே ஹாட் டாபிக்காம்.. இதுபற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட திமுக எம்.பி. ஒருவர், “பார்லிமெண்ட் கேம்பஸில் நம்ம சீனியர்கள்கிட்ட சில பாஜக அமைச்சர்கள் கேசுவலா பேசுனாங்கதான்.. அப்ப காங்கிரஸ் கட்சியை திமுக மட்டும்தான் தூக்கி சுமக்குது.. இந்தியாவுல காங்கிரஸுக்கு மூச்சு கொஞ்சம் இருக்குற மாநிலம் தமிழகம்தான்.. அதுவும் திமுகவோட தயவுலதான்.. இப்ப உங்க முதுகில குத்திட்டு விஜய் பக்கம் போகவும் காங்கிரஸ் ரெடியாகிடுச்சு..
எங்களுக்கும் உங்களுக்கும் (பாஜக திமுக) வேற என்ன பெரிய பிரச்சனை? நீங்க மட்டும் காங்கிரஸை கழற்றிவிடுங்க.. உங்க ஆட்சி சுமூகமாக நடக்கும்.. உங்களுக்கும் டெல்லி தொந்தரவு தராம இருக்கும்.. அரசியல் ரீதியாக நாம ரெண்டு பேரும் அடிச்சுகிட்டாலும் இப்படி ஒரு அண்டர்ஸ்டேண்டிங் வந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க “ என்கிற தகவலை ஷேர் செஞ்சதா டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
