டிஜிட்டல் திண்ணை: அதிமுக வேட்பாளர் பட்டியல் – எக்ஸ்க்ளுசிவ்!

Published On:

| By Aara

AIADMK Candidate List - Exclusive

வைஃபை ஆன் செய்ததும் அதிமுக மாசெக்கள் கூட்ட போட்டோக்கள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

”அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 9 ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி வரவேற்க, எஸ்.பி. வேலுமணி நன்றியுரையாற்ற இடையில் சுமார் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ADVERTISEMENT

’நாம் நாடாளுமன்றத் தேர்தலில் நமது தலைமையிலான வலிமையான அணியை அமைப்போம். நாம் தான் வெற்றி பெறுவோம். ஆனால் இதை உணர்ந்த திமுக, பல பொய்களை பரப்பி வருகிறது. பாஜகவுடன் அதிமுக மறைமுக உறவு வைத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால் திமுகதான் பாஜகவோடு ரகசிய உறவில் இருக்கிறது. இதை நாம் பொதுக்கூட்டங்களில் அம்பலப்படுத்த வேண்டும். தேர்தலை ஒற்றுமையாக நாம் எதிர்கொள்ள வேண்டும். கூட்டணியை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றவர், ‘கூட்டம் முடிந்ததும் மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் ஊருக்கு சென்றுவிடாதீர்கள். மாலை என் வீட்டில் முக்கிய ஆலோசனை இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டு உரையை முடித்துள்ளார் எடப்பாடி.

அதைப் போலவே ஜனவரி 9 ஆம் தேதி மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் மாவட்டச் செயலாளர்களை எம்பி தொகுதி வாரியாக சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களிடம் அவரவர் எம்பி தொகுதிகளில் யாரை வேட்பாளராக நியமிக்கலாம் என்று ஒரு பட்டியலை வாங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் பின் தனிப்பட்ட முறையில் சில சர்வேக்களை நடத்தி ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியலை தயார் செய்திருக்கிறார். இந்த இரு பட்டியலையும் இறுதி ஆய்வு செய்து இன்று மாவட்டச் செயலாளர்களை சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி,.

அதில் முதல்கட்டமாக அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மின்னம்பலத்துக்கு கிடைத்திருக்கிறது.

ADVERTISEMENT

AIADMK Candidate List - Exclusive

இதோ அந்த எக்ஸ்குளுசிவ் வேட்பாளர் பட்டியல்

தென் சென்னை – ஜெ. ஜெயவர்தன் (ஜெயக்குமார் மகன்)
வடசென்னை – ராயபுரம் மனோ
மத்திய சென்னை- எஸ்..ஆர். விஜயகுமார் எக்ஸ் எம்பி
அரக்கோணம்- திருத்தணி ஹரி
கிருஷ்ணகிரி – கே.பி.எம். சதீஷ் (கே.பி.முனுசாமி மகன்)
தர்மபுரி – கே.பி.ஏ.சந்திரமோகன் (கே.பி.அன்பழகன் மகன்)
நாமக்கல் – மோகன்
கோவை – ஷர்மிளா சந்திரசேகர்
பொள்ளாச்சி- கல்யாண சுந்தரம்
மதுரை -ராஜ் சத்யன்
சிவகங்கை- கோகுல இந்திரா
தஞ்சாவூர்- மா.சேகர்
ஸ்ரீபெரும்புதூர்- சிட்லபாக்கம் ராஜேந்திரன்
திருவள்ளூர்- வேணுகோபால்
கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர்
கள்ளக்குறிச்சி – காமராஜ்
திருவண்ணாமலை- ஜெயசுதா
திண்டுக்கல் – கண்ணன் (நத்தம் விசுவநாதன் மாப்பிள்ளை)
இராமநாதபுரம் – அன்வர் ராஜா

வேலூர் -கே.சி.வீரமணி 

ஆகியோர்தான் அதிமுகவின் முதல்கட்ட இருபது தொகுதிகளின் வேட்பாளர்களாக இறுதி செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் கோகுல இந்திரா, ஜெயசுதா, ஷர்மிளா சந்திரசேகர் ஆகிய மூவர் பெண்கள்.

அதேபோல வாரிசுகளும் இடம்பெற்றிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.,முனுசாமி, கேபி. அன்பழகன், நத்தம் விசுவநாதன் ஆகியோரின் மகன், மருமகன் ஆகியோர் வேட்பாளராகிறார்கள்.

அதிமுகவின் அடுத்த வேட்பாளர் பட்டியலை கூட்டணிக் கட்சிகளை கருத்தில் கொண்டு தயாரித்து வருகிறார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்டிரைக்கை தொடர்ந்து அதிரடி போராட்டத்தை கையிலெடுத்த சிஐடியு

திமுகவில் மீண்டும் இணைகிறேனா? – ராதாரவி ஓப்பன் டாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share