சிறை அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை!

Published On:

| By Kavi

Diwali Sale at Madurai prison Store

மதுரை சிறை அங்காடியில் நவதானிய காரம், இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி சிறப்பு விற்பனையை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார்.

மதுரை மத்திய சிறையில் இருக்கும் சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் சிறை அங்காடி செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

சிறைச்சாலைக்கு முன் பகுதியில் இருக்கும் இந்த கடையில், 1,500-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் தயாரிக்கும் துணிகள், செக்கு எண்ணெய், காலணி, மரப் பொருட்கள் மற்றும் இனிப்பு, கார வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடையில், இந்த ஆண்டுக்கான தீபாவளி விற்பனையை சிறைத்துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து பேசியுள்ள சிறைத் துறையினர், “இந்த ஆண்டு பக்கெட் பலகாரம், நவதானிய கார வகைகள், புதிய இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். ஒன்றரை கிலோ பக்கெட் பலகாரம் ரூ.499-க்கு விற்கப்படுகிறது.

சுய உதவிக்குழு பயிற்சியின் மூலம் பெண் சிறைவாசிகள் தயாரித்த சிறுதானிய, நவதானிய சீவல், கார வகைகள் கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதுதவிர, பிற இனிப்பு, கார வகைகளும் விற்கப்படுகின்றன. 1 கிலோ இனிப்பு ரூ.350-க்கும், கார வகைகள் ரூ.240-க்கும் விற்பனை செய் கிறோம்.

இம்முறை 5 ஆயிரம் கிலோ இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதேபோல், ரூ.4 லட்சம் மதிப்பிலான துணிகள், 2 ஆயிரம் லிட்டர் எண்ணெய், ரூ.3 லட்சம் மதிப்பிலான மரப்பொருட்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீபாவளி சீசனில் மொத்தம் ரூ.50 லட்சம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் நிதியின் மூலம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு உதவ இருக்கிறோம்” என்று கூறினர்

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஷாஹி ரசமலாய்!

தீபாவளி அன்று கனமழையா?

வாக்காளர் அட்டையை திருத்துவது எப்படி?

யார் இந்த அமரன் முகுந்த் வரதராஜன்? இறப்பில் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காத மனைவி!

திருப்பூர்: பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு… போராட்டம் நடத்திய விசிக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share