திமுகவிடம் 41 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் கேட்டதா காங்கிரஸ்? செல்வப் பெருந்தகை ரியாக்சன்

Published On:

| By Mathi

TNCC DMK

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகள் எத்தனை என்பது ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதுதான் தெரியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இன்று ஜனவரி 30-ந் தேதி பதிலளித்த செல்வப்பெருந்தகை, திமுகவிடம் 41 MLA சீட் பிளஸ் 1 ராஜ்யசபா MP சீட் கேட்டதாக பத்திரிகையாளர்கள்தான் சொல்கிறீர்கள். எங்களுக்கு தெரியாது. அது உண்மை இல்லை.

ADVERTISEMENT

ராகுல் காந்தி- கனிமொழி பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பது தெரியாது. அப்படி தெரிந்திருந்தாலும் கூட அதை பத்திரிகையாளர்களிடம் சொல்வது சரியானது அல்ல.

காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் எத்தனை என்பது தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதுதான் தெரியவரும் என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share