சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் தீவிரவாதிகள் தப்பி சென்றதாக தகவல் வந்ததை தொடர்ந்து, விமான பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். Did terrorists escape via Chennai
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், நடந்த தீவிரவாத தாக்குதலில் 24 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளின் கூடாரங்கள் அழிக்கப்பட்டன.
இந்த சூழலில் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இன்று (மே 3) ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.
அதில் சென்னையில் இருந்து இலங்கைக்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீவிரவாதிகள் தப்பி செல்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மின்னஞ்சல் பார்ப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுவிட்டது. Did terrorists escape via Chennai
இந்த சூழலில் இலங்கையில் உள்ள, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், “விமானம் UL 122 கொழும்புவில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகளால் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த தகவல் படி எங்கள் விமானத்தில், தீவிரவாதிகள் யாரும் பயணிக்கவில்லை. அந்த தகவல் புரளி. எங்கள் பயணிகளின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது. அதை நாங்கள் எப்போதும் உறுதி செய்வோம்” என்று கூறியுள்ளது.
இந்த சூழலில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. Did terrorists escape via Chennai
