செந்தில் பாலாஜி சிகிச்சையில் தலையிட்டேனா?: முதல்வரின் மச்சான் விளக்கம்!

By Kavi

|

Published on 20 Jun 2023, 12:44 PM

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளித்த விவகாரத்தில் என் தலையீடு எதுவும் இல்லை என்று மருத்துவரும் முதலமைச்சர் ஸ்டாலினின் மைத்துனருமான  ராஜமூர்த்தி வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்காவின் சகோதரர் ராஜமூர்த்தி  இஎஸ்ஐ மருத்துவமனை இயக்குநராக இருக்கிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில், ‘உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பரிசோதனை வேண்டாம். இஎஸ்ஐ மருத்துவமனை பரிசோதனையே போதும் என்று இஎஸ்ஐ மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்தி இயக்குநராக இருக்கும் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் சென்றதுதான் காரணம்’ என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் யூடியூப்களிலும் செய்திகள் பரவின.

ADVERTISEMENT

இதுகுறித்து நேற்று (ஜூன் 20) இரவு டாக்டர் ராஜமூர்த்தி ஃபேஸ்புக்  லைவ் வீடியோவில் பேசினார். 

அவர், ”யூடியூபர்ஸ் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து சென்ற மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக சொன்னதாகவும், அவர்கள் என் தலைமையில் இருந்து சென்ற மருத்துவர்கள் என்றும்  ஒரு கட்டுக்கதையை பரப்பி விட்டு கொண்டிருக்கின்றனர். அடிப்படை ஆதாரம் இல்லாமல் இப்படி செய்கின்றனர்.

ADVERTISEMENT

நான் தான் மருத்துவர்களிடம் ரிப்போர்ட் கொடுக்கச் சொன்னதாகவும், அதனடிப்படையில் இஎஸ்ஐ மருத்துவர்கள் ரிப்போர்ட் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். 

எங்களுடைய இஎஸ்ஐ- டிஎம்எஸ்  கட்டுப்பாட்டில் அயனாவரம், திருச்சி, வேலூர், சிவகாசி, மதுரை, ஒசூர் உள்ளிட்ட 7 மருத்துவமனைகள் வரும்.

கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனை என்பது மருத்துவ கல்லூரி. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு பணியாற்றக் கூடிய டீன் வட இந்தியாவைச் சேர்ந்தவர்.

அந்த மருத்துவமனையில் இருந்து சென்றுதான் செந்தில் பாலாஜிக்கு, ஓமந்தூரார் மருத்துவமனையின் அறிக்கையில் சொன்னவாறு அடைப்பு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இப்படி சொல்கிறவர்களிடம் நான் நேரடியாக பேச தயாராக இருக்கிறேன். என்னை பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம்.

எனது கட்டுப்பாட்டில் இயங்கும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் இதய சிகிச்சை நிபுணர்களே இல்லை” என்று விளக்கமளித்துள்ளார் டாக்டர் ராஜ மூர்த்தி.

பிரியா

செந்தில்பாலாஜி ஆபரேஷன் தேதி: மின்னம்பலம் தகவலை உறுதி செய்த அமைச்சர் மா.சு. 

நிதிஷ் குமார் திருவாரூர் வருகை ரத்து?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel