புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு அமெரிக்க வைரத்தில் அலங்காரம்!

Published On:

| By Minnambalam Login1

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று (செப்டம்பர் 7) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 35 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு காவல்துறை அனுமதி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தான் புதுச்சேரி, ஃபிரெஞ்ச் டவுனில் உள்ள மணக்குள விநாயகர் கோயிலின் நடை இன்று காலை நான்கு மணியளவில் திறக்கப்பட்டது.

பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்குப் பால், பன்னீர், சந்தனம், இளநீர் போன்ற 20-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து உற்சவருக்கு பூக்கள் மற்றும் அமெரிக்க வைரம் கொண்டு  அலங்காரம் செய்யப்பட்டது. மூலவருக்குத் தங்கக்கவசம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

விநாயகரை கும்பிட ஆயிரக்கணக்கான மக்கள் புதுச்சேரியிலிருந்து மட்டுமல்லாமல், புதுச்சேரியைச் சுற்றியுள்ள விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் மணக்குள விநாயகர் கோயிலில் குவிந்தனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் கோயிலுக்கு வந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதைக் கண்டுகளித்தனர்.

விநாயகரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கோயில் நிர்வாகம் லட்டு வழங்கியது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

இந்த வார OTT ரிலீஸ் : பேட் பாய்ஸ் முதல் கில் வரை!

அமெரிக்காவில் இருந்து அரசு பணி : ஸ்டாலின் ட்வீட்!

மதுரையில் சாமியாடிய மாணவிகள் : விசிக வைத்த முக்கிய கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share