வன்முறையின் உச்சம் காட்டிய ‘கில்’ ரீமேக்கில் துருவ் விக்ரம்

Published On:

| By Minnambalam Desk

Dhruv Vikram in the remake of Kill

டாம்க்ரூஸ் Dhruv Vikram in the remake of Kill

சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள் என்றாலே கேமிரா நோக்கி ரத்தத்தை வீசியிறைப்பது என்பது இன்று வாடிக்கையாகி விட்டது. ‘அதிக வன்முறை காட்சிகளை புகுத்துவது நீயா, நானா’ என்று படக்குழுக்கள் கிட்டத்தட்ட போட்டியிடுகிற நிலைக்கு அது சென்றுவிட்டது. அப்படி வெளியான சில படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த ஆதரவும் ஒரு காரணம். அப்படியொரு சூழலில், ‘இதெல்லாம் என்ன வன்முறை’ என்பது போலத் திரையில் கோரத் தாண்டவத்தை நிகழ்த்தியது ‘கில்’ இந்தி திரைப்படம்.

தனது காதலிக்கு வேறொருவருடன் நிச்சயம் ஆனதைத் தெரிந்துகொள்ளும் கமாண்டோ படை வீரர் ஒருவர், தன்னுடன் வருமாறு அப்பெண்ணை அழைக்கிறார். அந்தப் பெண்ணின் தந்தை அப்பகுதியில் செல்வாக்குமிக்க ஒரு நபர். அவரை மீறித் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்கிறார் அப்பெண். Dhruv Vikram in the remake of Kill

ADVERTISEMENT

அடுத்தநாள், குடும்பத்தினருடன் ரயிலில் பயணிக்கும் காதலியைப் பின்தொடர்கிறார் அந்த வீரர். அவரது நண்பர் ஒருவரும் அவருடன் பயணிக்கிறார். அதே ரயிலில் சில கொடூர கொள்ளையர்களும் ஏறுகின்றனர். அவர்களிடம் அப்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் சிக்கிக் கொள்கின்றனர். அப்போது, அந்த கும்பலின் தலைவன் அந்தப் பெண்ணைத் தாக்கி, ரயிலில் இருந்து தள்ளிவிடுகிறார்.

அதன்பின் என்னவானது என்பதைப் படம் முழுக்கச் சண்டைக்காட்சிகளாக நிறைத்துக் கதை சொல்லியிருந்தார் இயக்குனர் நிகில் நாகேஷ் பட். படமே ‘ரத்தக்களரி’யாக இருந்ததாக விமர்சகர்களும் திட்டித் தீர்த்தார்கள்.

ADVERTISEMENT

ஆனாலும், இதனைத் தமிழ், தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். Dhruv Vikram in the remake of Kill

Dhruv Vikram in the remake of Kill

சில நாட்களுக்கு முன்பு, ‘கில்’ ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நடிப்பதாகத் தகவல் வெளியானது. கிட்டத்தட்ட அவரது தோற்றம், உடல்மொழி ஆகியன அப்பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்றே ரசிகர்களும் கூறிவந்தனர்.

ADVERTISEMENT

இப்படத்தில் துருவ் விக்ரம் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே தகவல்கள் வருகின்றன. 2022ஆம் ஆண்டு தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘கில்லாடி’ பட இயக்குனர் ரமேஷ் வர்மா இதனை இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

‘கில்லாடி’ பெரிய வெற்றியைப் பெறாதபோதும், ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் படமாக இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடினர். அதனால், ‘கில்’ பட ரீமேக்கும் அப்படியே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போது, இதில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share