இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதில் 3-இல் வெற்றி பெற்று, தற்போது இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது ஆட்டத்தில், இந்திய அணிக்கு அறிமுகமான இளம் வீரர் துருவ் ஜூரேல், அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களை சேர்த்திருந்தார். அதுமட்டுமின்றி, 1 ஸ்டம்பிங், 1 கேட்ச் என விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, கடைசியாக ராஞ்சியில் நடைபெற்ற 4வது போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 161 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து ஒரு இக்கட்டான நிலையில் இருந்தபோது களமிறங்கிய துருவ் ஜூரேல், யாரும் எதிர்பார்த்திராத அளவு ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த இன்னிங்ஸில் 90 ரன்களை குவித்த அவர், இந்தியாவை ஒரு பாதுகாப்பான நிலைக்கு எடுத்து சென்றார்.
2வது இன்னிங்ஸில் 39 ரன்களை சேர்த்திருந்த துருவ் ஜூரேல், இப்போட்டியில் 3 கேட்ச்களை பிடித்திருந்தார். தனது இந்த சிறப்பான ஆட்டத்தால், துருவ் ஜூரேல் தனது 2வது டெஸ்ட் போட்டியிலேயே ‘ஆட்ட நாயகன்’ விருதை கைப்பற்றினார்.

இந்நிலையில், இந்த 4வது டெஸ்ட் போட்டியின்போது வர்ணனையில் ஈடுபட்டிருந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், துருவ் ஜூரேலை தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார். “பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அதேபோல, விக்கெட் கீப்பிங்கிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டார். அவரது விளையாட்டை பார்க்கும்போது, அவரை அடுத்து தயாராகிவரும் தோனி என்றுதான் சொல்ல தோணுகிறது”, என கவாஸ்கர் தெரிவித்தார்.
அதேபோல, துருவ் ஜூரேலின் ஆட்டத்தை பார்த்த முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் டாம் மூடி, “இந்தியா ஒரு வைரத்தை கண்டுபிடித்துள்ளது”, என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Dhruv Jurel is some player, India have found a gem. #temperament #INDvENG
— Tom Moody (@TomMoodyCricket) February 26, 2024
“முதல் இன்னிங்ஸில் நம்மை ஆட்டத்தில் இருக்க வைத்த துருவ் ஜூரேல், 2வது இன்னிங்ஸில் நம்மை வெற்றிக்கு அழைத்து சென்றார்”, என சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
The score is 3-won! 😉
India once again came back from a pressure situation and fought back to win the match. It shows the character and the mental strength of our players.
A great first spell in Test cricket for Akashdeep. @dhruvjurel21 was terrific at reading the length in… pic.twitter.com/DgaFoqMiTa
— Sachin Tendulkar (@sachin_rt) February 26, 2024
தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் இந்த போட்டியில், துருவ் ஜூரேலின் ஆட்டம் தனியாக ஜொலிக்கிறது”, என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
In a series-defining Test, Dhruv Jurel’s standout display shone brightly. Admirable composure showcased in both innings. His calmness was shouting “ I can do this without much sweat” #INDvENG
— Irfan Pathan (@IrfanPathan) February 26, 2024
“கிரிக்கெட்டின் எதிர்காலம் நல்ல கைகளில்தான் இருக்கிறது”, என இயன் பிஷப் துருவ் ஜூரேலின் ஆட்டத்தை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
That’s quite an impressive series win for India’s young brigade. Key contributions now from the impressive Dhruv Jurel 🙌🙌🙌. Around the cricketing landscape we are witnessing some really talented young players popping up. Future of the game is in good hands.
— Ian Raphael Bishop (@irbishi) February 26, 2024
இதேபோல, துருவ் ஜூரேலுக்கு வெங்கடேஷ் பிரசாத், வீரேந்தர் சேவாக், வி.வி.எஸ். லக்ஷ்மன் உள்ளிட்டோரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஜாபர் சாதிக் கூட்டாளிகளை விசாரிக்காதது ஏன்?” – அண்ணாமலை கேள்வி!
வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!
WPL 2024: வெற்றி நடையை தொடரும் MI மகளிர் அணி!
ஒரு வருடத்திற்கு இலவச OTT… முன்னணி ‘தொலைத்தொடர்பு’ நிறுவனத்தின் அசத்தல் ஆஃபர்!
